இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஹார்லி டேவிட்சன் பைக் பிரியர்களுக்கு மிகப்பெரிய பரிசை தந்து இருக்கிறது. இந்தியா அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கையெழுத்திட இருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் தயாரிக்கப்படக்கூடிய ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான இறக்குமதி வரியை இந்தியா முற்றிலுமாக நீக்க இருக்கிறது. அதாவது அமெரிக்க அரசாங்கம் நீண்ட காலமாகவே தங்கள் நாட்டில் தயாரிக்கப்படக்கூடிய ஆடம்பர வாகனங்களுக்கு இந்தியா அதிகபட்ச வரியை விரிப்பதாகவும் அதனை குறைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறது.

இந்த சூழலில் இடைக்கால ஒப்பந்தத்தின்படி மத்திய அரசு 800சிசி எஞ்சின் திறனுக்கும் அதிகமான திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை பூஜ்ஜியமாக குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை கணிசமாக குறையும்.
இந்திய அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய 800 முதல் 1600 சிசி வரையிலான எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான வரியை முழுவதுமாக நீக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் எக்னாமிக்ஸ் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
தற்போது இவ்வகை வாகனங்களுக்கு 44% இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது. அதாவது அமெரிக்காவிலேயே முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 44% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த 44% இறக்குமதி வரி முற்றிலுமாக நீக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறதாம். அப்படி பார்க்கும்போது இந்திய சந்தையில் இனி ஹார்லி டேவிட்சன் பைக் விலை 44% வரை குறைய வாய்ப்புள்ளது.
இந்தியா இருசக்கர வாகன விற்பனைக்கான மிகப்பெரிய சந்தை. ஆனால் இங்கே பெரிய அளவில் 110 லிருந்து 250சிசி என்ற திறன் கொண்ட வாகனங்களுக்கு தான் டிமாண்ட் அதிகம். ஹார்லி டேவிட்சன் போன்ற பிரீமியம் ரக பைக்குகளை வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால் இனிவரும் ஆண்டுகளில் அது அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி நீக்கத்தால் விலை குறையும் பட்சத்தில் இதனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதத்தில் 187 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. 14.54 லட்சத்திலிருந்து 46 லட்சம் ரூபாய் வரை இவ்வகை பைக்குகள் விற்கப்படுகின்றன. ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் தற்போது ஹீரோ மோட்டார் கார்ட் நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தம் செய்து தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications