அயோத்தி ராமர் வைரத்தால் ஜொலிக்க.. இந்த ஒரு நகை கடை தான் காரணமாம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் 5 வயது பாலராமராக வீற்றிருக்கும் சிலையில் மிக நேர்த்தியான வேலைப்பாடுகள் கொண்ட வைரங்களும், தங்க அணிகலன்களும் பிரமிக்க வைக்கின்றன.

குறைந்தது 15 கிலோ தங்கமும் 18,000 வைரங்கள், எமரால்டுகளும் பயன்படுத்தப்பட்டு இந்த நகைகள் செய்யப்பட்டுள்ளன. திறமைவாய்ந்த ஆசாரிகளால் மிக நுணுக்கமான முறையில் ராமாயண காவியத்தின் புனிதமான ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் வைரத்தால் ஜொலிக்க.. இந்த ஒரு நகை கடை தான் காரணமாம்..!

இந்த நகைகள் 14 பீஸ்களாக உள்ளன. ஒரு திலகம், ஒரு கிரீடம், நான்கு நெக்லெஸ்கள், ஒரு ஒட்டியாணம், இரண்டு தண்டைகள், விஜய மாலை, இரண்டு மோதிரங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த நகைகள் 12 நாட்களுள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பாலராமரின் நகைகளை செய்யும் பொறுப்பு லக்னோ-வின் ஹர்ஷயமல் சியாம்லால் ஜுவல்லர்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ராமர் கோயில் அறக்கட்டளை இந்த ஜுவல்லரியை 15 நாட்களுக்கு முன்புதான் தொடர்பு கொண்டது.

நகையின் சென்டர் பீஸாக உள்ள கிரீடம் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுவனின் தலைப்பாகையைப் போன்று இந்த கிரீடம் தோன்றுகிறது. ஐந்து வயது சிறுவனக்குப் பொருத்தமான முறையில் இந்த கிரீடத்தை செய்து தருமாறு ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

22 கேரட் தங்கத்தால் ஆன இந்த கிரீடம் 1.7 கிலோ எடையில் 75 கேரட் வைரங்கள், 175 கேரட் ஜாம்பியன் எமரால்டு கற்கள், 262 கேரட் ரூபி கற்களைக் கொண்டிருக்கிறது.

ராம பகவானின் சூர்ய வம்சத்தை பிரதிபலிக்கும் வகையில் தூய்மையை பறைசாற்றும் வைரங்களால் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரீடத்தைப் போன்றே நெற்றித் திலகம்16 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்டு அதில் மூன்று கேரட் வைரங்கள் மத்தியில் இருக்க சுற்றிலும் 10 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

அதன் தோற்றத்தைப் பொலிவாக்கும் வகையில் பர்மா ரூபி கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இத்துடன் 65 கிராம் எடை கொண்ட ஒரு எமரால்டு வளையம் இந்தத் திலகத்தை மேலும் மெருகூட்டுகிறது.

நான்கு கேரட் வைரங்கள், 33 கேரட் எமரால்டு கற்கள், மத்தியில் ஒரு ஜாம்பியன் எமரால்டு பதிக்கப்பட்டுள்ளன. இந்த வளையம் ராமரின் அறிவாற்றலையும் வனவாசத்தின்போது இயற்கையுடன் இயைந்த உறவைப் பிரதிபலிக்கிறது.

மொத்தத்தில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் ராம பகவானின் இறைவாழ்க்கையை தத்ரூபமாக வெளிப்படுத்துகின்றன.

51 இஞ்ச் பாலராமர் சிலை ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பிரான் பிரதிஷ்டை சடங்கை பார்த்து பரவசம் அடைந்தனர்.

ராமர் கோயிலில் பிரான் பிரதிஷ்டை சடங்குக்குப் பின்னர் ராமர் கோயில் நுழைவாயில்கள் பொதுமக்களுக்காக செவ்வாய்க்கிழமையன்று திறக்கப்பட்டன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+