இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிகளுக்கான தேவையானது படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இந்தியா டிஜிட்டல் கரன்சிகளுக்கான தேவையில் புதிய உச்சத்தினை எட்டி வருகின்றது எனலாம்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்த ஒரு பதிவு.
பெங்களூரில் டீக்கடையில் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்வதாக போர்டு வைத்துள்ளார் அந்த கடையின் உரிமையாளர்.
ஆர்வம் காட்டவில்லை
இன்று பங்கு சந்தை தொடங்கி பெரும் முதலீட்டு நிபுணர்கள் கூட கிரிப்டோகரன்சிகளில் ஆர்வம் காட்டவில்லை. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ரிசர்வ் வங்கியே கிரிப்டோகரன்சியை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய அரசும் கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக மசோதா ஒன்றை திட்டமிட்டது.
தி நியூ இந்தியா
சொல்லப்போனால் அதன் எதிரொலி தான் டிஜிட்டல் ரூபாய் எனலாம். இந்த நிலையில் ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டினை போட்டுள்ளார்.
அந்த ட்வீட்டிற்கு தி நியூ இந்தியா... என கேப்ஷன் கொடுத்து ஒரு டீக்கடையின் போட்டோவினை பதிவிட்டுள்ளார். அதில் இளைஞர் ஒருவர் டீ போடுவதையும், அங்கு கிரிப்டோக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என போர்டு வைத்துள்ளார்.
யுபிஐ, டாலர்/ரூபாய்
ஒரு புறம் கிரிப்டோகரன்சிகளும் மறுபுறம் யுபிஐ, டாலரும் ஏற்றுக் கொள்ளப்படும் என போர்டு வைத்துள்ளதை பார்க்க முடிகிறது.
தொழிலதிபரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஸ்டால் குறித்த ட்வீட்டுக்கு, பதிலளித்த ஷூபம் சைனி என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார். எங்களின் முயற்சியை குறிப்பிட்டதற்கு நன்றி சார் என்று பதிவிட்டுள்ளார். சைனி ஒரு கிரிப்டோ டிரேடர் இல்லை என்றாலும், புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள் கண்டிப்பாக முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
படிப்பை பாதியிலேயே விட்டவர்
சைனி பிசிஏ படிப்பினை பாதியிலேயே விட்டு வெளியேறிவர் ஆவார். இவரது ட்விட்டர் புரபைலை கூட @Frustrated Dropout என வைத்துள்ளார். சைனியின் இந்த புத்திசாலிதனமான நடவடிக்கையால் பலரும் இணையத்தில் ஈர்க்கப்பட்டு, லைக் செய்தும் கமண்ட் செய்தும் வருகின்றார்.
முன் கூட்டியே வாழ்கிறார்
டீ விற்பவர் தனது வாழ்க்கையை முன் கூட்டியே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று ட்விட்டர் வாசிகள் அவரை பெருமைப்படுத்தி வருகின்றனர். இது இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை காட்டுகின்றது. இது வளரும் பொருளாதாரமாக இருந்து வருகின்றது.
கிரிப்டோ டீயா இது நல்லா இருக்கே.. ஒரு சிலர் இது மிக வேகமாக வளரும் இந்தியா என்றும் ட்வீட் மழை பெய்து வருகின்றனர்.
ஆர்வம் அதிகரிப்பு
மொத்தத்தில் எதிர்கால சந்ததியினர் மத்தியில் கிரிப்டோகரன்சி குறித்தான ஆர்வம் என்பது அதிகரித்து வருவதை இந்த பதிவானது சுட்டிக் காட்டுகின்றது. நிச்சயம் எதிர்காலத்தில் கிரிப்டோ குறித்தான வணிகம் மேற்கத்திய நாடுகளில் இருப்பதை போல இந்தியாவிலும் வளர்ச்சி காணலாம்.


Click it and Unblock the Notifications