1980-90-களில் பங்குச் சந்தையில் ஒரு காலத்தில் பிக் புல் என்ற பெயருக்கு சொந்தக்காரராக இருந்தவர்தான் ஹர்ஷத் மேத்தா. இந்த பெயரை சமீபத்தில் நீங்கள் எங்கேயோ கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், சென்ற மாதம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளிவந்த லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் இவருடைய கதை அப்படியே வெளியிடப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் இவர் என்னென்ன ஊழல்களை செய்தார். எப்படி ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து அந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இது வைரலாகி வருகிறது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம்தான் லக்கி பாஸ்கர். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தின் தலைவராக குடும்பத்தை நிர்வகிப்பார். வங்கியில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவராக இருப்பார். கடன் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, வேலையில் வங்கி இவருக்கு உயர் பதவியில் அமரவைப்பதாக உறுதியளித்து ஏமாற்றும் வேளையில், மனமுடைந்து காணப்படும் அவர் எப்படி இவற்றையெல்லாம் சமாளித்து ஹர்ஷத் மேத்தா கதையில் எப்படி கனெக்ட் ஆனார் என்பதுதான்.

ஹர்ஷத் மேத்தா என்பவருக்கு வங்கியில் அசிஸ்டண்ட் மேஜேனராக பொறுப்பேற்றபின் வங்கி உத்தரவாதங்களை வழங்க வங்கி நிர்வாகம் உத்தரவிடும் அதிலும் குறிப்பாக ஹர்ஷத் மேத்தா வங்கி உத்தரவாதங்களுக்கு கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திடுவதுடன் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து அவரது அசிஸ்டண்ட் ஒருவரிடம் சேர்த்து ஒரு குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்து விற்பனை செய்து வங்கியில் மேஜேனராக இருக்கும் துல்கர் சல்மான் தனது வாழ்க்கையை முன்னேற்றுவார். அப்போது ஒரு கட்டத்தில் சில சூழ்நிலைகள் காரணமாக இந்த வங்கி உத்தரவாதங்களில் கையெழுத்திடுவதை நிறுத்தினார். இந்த காலகட்டத்தில் அதிகம் சம்பாதித்திருப்பார்.
அப்போது அவருடைய வங்கி கணக்கில் 100 கோடி வந்தது குறித்து வருமான வரித்துறை அவரிடம் கேள்வி கேட்கும் திரைப்படம் தான் லக்கி பாஸ்கர். இந்த கதை ஏற்கனவே Scam 1992 என்ற வெப்சீரிஸ் மூலம் பிரபலாமன நிலையில், தற்போது லக்கி பாஸ்கர் என்ற படம் மூலம் ஹிட் அடித்து வருகிறது.
உண்மையில், ஹர்ஷத் மேத்தா என்ற தொழிலதிபர் 1980-90 காலகட்டங்களில் இந்தியாவின் பங்குச்சந்தையின் சிட்டி கிங் என்று அழைக்கப்பட்டார். அவர் இந்த நேரத்தில் பங்குச்சந்தையில் நிகழ்த்திய சாதனைகளால் மிகுந்த புகழை பெற்றார்.அதே நேரத்தில் அவர் பங்குச்சந்தை மோசடி வழக்கில் சிக்கினார். இந்த மோசடிகளை கடந்த 1992ஆம் ஆண்டும் ஒரு தனியார் நாளிதழில் பணிபுரிந்த சுசேதா தலால் என்ற பத்திரிக்கையாளர் வர்த்தக மோசடியை வெளிக்கொண்டு வந்து ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியாக்கியது.
ஹர்ஷத் மேத்தா என்பவர், பங்குச் சந்தையில் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து, தனக்கு தேவையான நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அப்பங்குகளின் சந்தை விலையை 40சதவீதம் போல் உயந்தது போல் காட்டி வந்துள்ளார். பின்பு அதனை நம்பி பல முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பின்,தன்னுடைய பங்குகளை மொத்தமாக அதிக லாபத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான பணங்களை வங்கிகளில் போலி வங்கி உத்தரவாதங்களை (BR) தயாரித்து,பணத்தை வங்கியிடம் இருந்து தவறான முறையில் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த ஊழல் வெளிவரவே இவர் செய்த நிதி மோசடிகள் உள்ளிட்ட வங்கிகளுடனான தொடர்பு உள்ளிட்டவை விசாரணையில் வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் ஒட்டுமொத்தமாக பல லட்சம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்ததுடன் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த மோசடியில் சுமார் 4000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவின் பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக கருதப்பட்டது. இதனை தொடர்ந்து செபி பல புதிய விதிகளை விதித்துள்ளது.
ஹர்ஷத் மேத்தா 1992 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 9 ஆண்டுகள் சிறையிலிருந்த ஹர்ஷத் மேத்தா உடல்நிலை சரியில்லாமல் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சிறை வளாகத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவருடைய வயது 47. இந்த நிலையில், தற்போது தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் லக்கி பாஸ்கர் படம் சக்சஸ்ஃபுல் ஆக ஓடிக்கொண்டிருப்பதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications