ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு அதன் 15 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்ச்குலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மிட்ஸ்கைண்ட் ஹெல்த்கேர், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 13 டாடா பஞ்ச் வாகனங்கள் மற்றும் 2 மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களை அதன் சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியது.
நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே.பாட்டியா, கார்களுக்கான சாவியை ஊழியர்களிடம் ஒப்படைத்தார். ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் அவர் பாராட்டினார். "அவர்கள் எனக்கு பிரபலங்களைப் போன்றவர்கள். நிறுவனத்தின் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இது எங்களுடைய பாராட்டுகளை காண்பிப்பதற்கான ஒரு வழியாகும். தீபாவளி பண்டிகைக்காக இந்தப் பரிசுகள் திட்டமிடப்படவில்லை" என்றும் பாட்டியா கூறினார்.

எதிர்பாராத பரிசுகளை வழங்கியதற்காக ஊழியர்களும் நன்றி தெரிவித்தனர். "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நான் பணியில் சேர்ந்தபோது, எனது பணியாளர்கள் அனைவருக்கும் கார் வழங்க வேண்டும் என்ற கனவு இன்று நிறைவேறியுள்ளது என்று மிட்ஸ்கைண்ட் ஹெல்த்கேரின் மூத்த அதிகாரியான வீனஸ் கூறினார். மற்றொரு பணியாளரான ரேகா, தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார், நிறுவனம் எனது எரிபொருள் செலவுகளை இன்னும் ஈடுசெய்கிறது" என்று கூறினார்.
நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார்களை வெகுமதியாக வழங்குவது இது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு, 12 ஊழியர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதன் மூலம் வழங்கப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மிட்ஸ்கைண்ட் ஹெல்த்கேர் எதிர்காலத்தில் இதே நடைமுறையைத் தொடரவும் திட்டமிட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பன்ச் கார்களின் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் மற்றும் 1.2 லிட்டர் எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. 5 நட்சத்திர G-NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த கார், அதன் பாதுகாப்பிற்காக பெயர் பெற்றது.
சமீபத்தில் சென்னையை சேர்ந்த டீம் டீடைலிங் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக பல்வேறு கிப்ட்டுகளை வழங்கியது. அதில் 22 கார்கள் மற்றும் 29 பைக்குகள் ஆகியவை அடங்கும். நாட்டின் முன்னணி ஸ்டீல் வடிவமைப்பு நிறுவனமான டீம் டீடைலிங் சொல்யூஷன்ஸ் 6 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கான ஊக்கத்தொகை, 10 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கான ஊக்கத்தொகை, திருமணத்திற்கான ஊக்கத்தொகை என பல்வேறு நலத்திட்டங்களையும் ஊழியர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையையோட்டி தங்களுடைய ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியான நிமிடத்தில் இருந்து பல்வேறு ஊழியர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் "அந்த மனசு தான் சார் கடவுள்" என்று கூறி நிறுவனரை பாராட்டி வருகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications