ஹரியானா அரசு 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய கலால் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் முக்கியமான விஷயமாக கார்பரேட் அலுவலகங்களில் மதுபானம் அருந்த அனுமதி அளித்துள்ளது.
புதிய கலால் கொள்கையில் அவாண்ட்-கார்ட் விற்பனை நிலையங்கள், மரத்தாலான அல்லது கிரானைட் தரையமைப்புகள் கொண்ட கடைகள், கார்ப்பரேட் அலுவலகங்களில், தொழில்துறை மாதிரி நகரங்களில் அதாவது Industrial Model Townships-களில் மது அருந்துவது குறித்த அனுமதி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய கலால் கொள்கையில் பட்டியலிட்டப்பட்ட இடங்களில் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டாலும் பீர் மற்றும் வைன் உட்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிற மதுபான வகைகளை உட்கொள்ள முடியாது.

ஜூன் 12 முதல் நடைமுறைக்கு வரும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான கலால் கொள்கை, மே 9 அன்று ஹரியானா அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய மதுபானக் கொள்கையின்படி, ஒரே வளாகத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அலுவலகம் இருந்தால், கார்ப்பரேட் அலுவலகத்தின் அடிப்படையில் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்கள் அதாவது பீர் அல்லது வைன் உட்கொள்வதற்கான உரிமம் (L-10F) வழங்கப்படும்.
இந்த கார்பரேட் அலுவலகங்களில் மதுபானம் அருந்துவதற்கு அனுமதி பெற வேண்டுமாயின் 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களுடன் அலுவலகம் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.
புதிய கலால் கொள்கையை படி மதுபானம் அருந்துவதற்கான உரிமம் வழங்குவதற்கு, பார் உரிமம் பெறுவதற்கான நடைமுறை பொருந்தும். கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையரால் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் எல்-10எஃப் உரிமம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வழங்கப்பட உள்ளது.
கேண்டீன் அல்லது உணவகம் குறைந்தபட்சம் 2,000 சதுர அடி பரப்பளவில் இருந்தால் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு L-10F உரிமம் வழங்கப்படும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications