ஹரியானா: இந்தியாவில் தற்போது பல்வேறு இளைஞர்களும் வேலைக்கு செல்வதை தாண்டி சுயமாக தொழில் செய்து முன்னேறி விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். அப்படி சுயதொழில் செய்ய விரும்பும் பலருக்கும் காளான் வளர்ப்பு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காளான் வளர்ப்பில் ஆண்டுக்கு 2.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் இருக்கும் சலேம்கர் கிராமத்தை சேர்ந்த 26 வயதான இளைஞர் விகாஷ் வர்மா. இவருடைய குடும்பமே பாரம்பரியமாக விவசாய பணிகளில் தான் ஈடுபட்டு வந்திருக்கிறது. இவருடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் கோதுமை, பஞ்சு உள்ளிட்டவற்றை வேளாண்மை செய்து வந்தனர். இருந்தாலும் குடும்பத்திற்கு தேவையான செலவுகளுக்கு கூட விவசாயத்திலிருந்து அவர்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை.

இதனால் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்த விகாஷ் காளான் வளர்ப்பு பற்றி தெரிந்து கொண்டாராம் . மாநில வேளாண் துறை சார்பாக நடத்தப்பட்ட காளான் வளர்ப்பு வகுப்புகளில் கலந்து கொண்டாராம், இதனை எடுத்து பல்வேறு இடங்களுக்கும் சென்று காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன எப்படி எல்லாம் அவற்றை கடந்து வர வேண்டும் என கற்றுக் கொண்டார்.
காளான் வளர்ப்பிற்கு ஏசி தேவை ஆனால் அதற்கு ஏற்ற நிதி தன்னிடம் இல்லை எனவே குளிர்ச்சியான சூழலில் காளான் வளர்க்க மூங்கிலை கொண்டு வித்தியாசமான கூரை வீட்டை அமைத்தார். ஸ்மார்ட்டான முறையில் இரண்டு குடிசைகளை உருவாக்கி அதில் காளான் வளர்க்க தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் இவருக்கு காளான் வளர்ப்பில் எந்த லாபமும் கிடைக்கவில்லை மாறாக நஷ்டம் தான் அடைந்திருக்கிறார்.
தன்னுடைய தவறுகளில் இருந்து படிப்படியாக கற்றுக்கொண்டு இரண்டு குடிசைகளை உருவாக்கி இருக்கிறார் . இந்த குடிசைகளில் இவர் 8,000 காளான் பைகளை கொண்டு காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். 2017ஆம் ஆண்டில் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறார். அதே ஆண்டில் இவருக்கு காளான் வளர்ப்பில் 24 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது/. பின்னர் தொடர்ச்சியாக காளான் வளர்ப்பை விரிவாக்கம் செய்த இவர் தற்போது பல்வேறு வகையான காளான்களையும் வளர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறார்.
தற்போது 3.5 ஏக்கர் நிலத்தில் இவர் கூரைகளை அமைத்து வேதாந்தா மஸ்ரூம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி ஆண்டுக்கு 1.5 லட்சம் கிலோ பட்டன் காளான் ,1 லட்சம் கிலோ ஓயிஸ்டர் காளானை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் இவர் சுமார் 2.25 கோடி வருமானமாக ஈட்டு இருக்கிறார் .இதில் இவருக்கு கிடைத்த லாபம் மட்டும் 1 கோடி ரூபாய்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications