இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

நிதி சட்டம் 2025 இன் ஓய்வூதியதாரர்களுக்கு இனி சம்பள கமிஷன் பலன்கள் கிடைக்காது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது .இத்தகைய சூழலில் மத்திய அரசின் பிஐபி உண்மை கண்டறியும் குழு இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் முக்கியமான ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறது .
அதாவது சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில் பரவக்கூடிய செய்தியில் மத்திய அரசு ஓய்வு கால பலன்கள் , அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்டவற்றை நிதி சட்டம் 2025 இன் படி நீக்கிவிட்டது என ஒரு தகவல் பரவி வருகிறது இது போலியான செய்தி என குறிப்பிட்டு இருக்கிறது .
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷனின் பலன்கள் கிடைக்காதா ? என்ற தலைப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய தகவல்களை நம்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது . ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்களில் எந்தவித மாற்றத்தையும் அரசு கொண்டுவரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு மத்திய அரசு தன்னுடைய ஓய்வூதிய பலன்களுக்கான சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒரு பொதுத்துறை நிறுவன ஊழியர் தவறான செயல்களுக்காக வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தால் அவருக்கான ஓய்வு கால பலன்கள் ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இதனை தவறான முறையில் திரித்து தற்போது போலியான தகவலாக பகிர்கிறார்கள் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழக்கம் போலவே அகவிலைப்படி உயர்வு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு ஆகியவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications