உலகளவில் எல்லோரும் பயந்து கொண்டு இருந்த விஷயம் தற்போது நடக்கத் துவங்கியுள்ளது, எந்த ஒரு பெரிய விஷயம் நடப்பதற்கு முன்பு ஒரு சிறிய துவக்கம் இருக்கும் என்பது போது, ஏஐ பபுள் வெடிப்பின் ஆரம்பம் சீனாவில் பதிவாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தான் உலகின் எதிர்காலமாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை, ஆனால் இதற்கான செய்யப்படும் செலவும், இதன் மூலம் கிடைக்கும் லாபம், பலன், பாதிப்பு ஆகியவை தான் தற்போது பெரும் கேள்வியாகவே உள்ளது.

முதலீட்டுச் சந்தையும், முதலீட்டாளர்களும் எப்போதும் கனவை நோக்கி ஓடாது, லாபத்தை நோக்கித் தான் ஓடும். அந்த வகையில் ஏஐ மீதான முதலீடுகளில் போதுமான லாபம் கிடைப்பதில்லை என முதலீட்டாளர்கள் புலம்ப துவங்கிய, இதேவேளையில் முதலீட்டுச் சந்தையிலும், ஏஐ வளர்ச்சியிலும் பெரும் மாற்றம் நடந்து வருகிறது.
இதன் விளைவாகச் சீனாவில் ஏஐ மற்றும் செமிகண்டக்டர் துறை பங்குகளை டிராகிங் செய்யும் STAR 50 குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 40 சதவீதம் குறைந்து இக்குறியீட்டின் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 480 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
இதேபோல் தென் கொரியாவின் காஸ்பி குறியீடு அதன் 2026 உச்ச அளவில் இருந்து 33 சதவீதம் சரிந்துள்ளது, தைவான் நாட்டின் TAIEX குறியீடு 2026 பதிவான உச்சத்தில் இருந்து 7.6 சதவீதமும், நாஸ்டாக் 6 சதவீதமும் சரிந்துள்ளது.
இது அனைத்தும் கடந்த 4 மாதங்களில் நடந்துள்ளது, தற்போதைய சூழ்நிலையில் சீன சந்தை வேகமாகக் குறைகிறது, மற்ற சந்தைகள் சற்று குறைவான வேகத்தில் குறைகிறது.
இதன் மூலம் மொத்த சந்தையும் சரிவு பாதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஏஐ பபுள் சீனாவில் இருந்து வெடிக்கத் துவங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மாபெரும் சரிவுக்கு மிக முக்கிய காரணமாகப் பார்ப்பது ஏஐ மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களின் அதிகப்படியான மதிப்பீடு, தொடர்ந்து செலவு செய்யப்படும் நிலை இருக்கும் காரணத்தால் எப்போது லாபம் பார்ப்பது என்ற கேள்வி, முதலீட்டாளர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி ஆகியவை தற்போது சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
சமீபத்தில் முதலீட்டுச் சந்தையில் உருவான அலையில் ஏஐ, சிப், ரோபோட்டிக்ஸ் பிரிவு நிறுவனங்கள் அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது வேகமான சரிவடைந்து வருகிறது.
இது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் காரணத்தால் வலிமையான நிறுவனம் கூட தற்போது சரிவில் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது, இதனால் ஏஐ துறையின் வளர்ச்சி முடிந்துவிட்டதா என்றால் இல்லை. முதலீட்டாளர்கள் தற்போது மிகவும் எச்சரிக்கை உடன் செயல்படத் துவங்கியுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது. இதனால் அடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்றால்..?
இனி சிப், ரோபோட்டிக்ஸ், டேட்டா சென்டர், ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிறுவன வளர்ச்சிக்காக முதலீட்டை ஈர்ப்பது என்பது கடினமாகும். உலக நாடுகள் அனைத்தும் ஏஐ கொள்கை, முதலீட்டுக் கொள்கைகளை மறு ஆய்வு செய்ய துவங்கும்.
இதற்கிடையில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் செலவுகளைத் தாக்குப்பிடிக்க முடியாத நிறுவனங்கள் அனைத்தும் மாயமாகும், அல்லது பெரிய நிறுவனங்களால் கைப்பற்றப்படும். இதனால் ஏஐ துறையில் பபுள் வெடித்ததிற்கான அனைத்து சிக்னலும் வெளியில் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications


