வருமான வரித் தாக்கல் செய்யும் போது, பலரும் தேடுவது வரிச்சலுகை பெற ஏதேனும் ரகசிய வழி கிடைக்குமா என்பதுதான். பொதுவாக நன்கொடை ரசீதுகளைக் காட்டுவதன் மூலம் பெரிய வரிச்சலுகை பெறுவது பல ஆண்டுகளாக இருந்து வரும் டெக்னிக்காக இருந்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது எனலாம்.
போலி ரசீதுகள் மூலம் கிளைம் செய்த ஒவ்வொரு ரூபாயும், இப்போது வருமான வரித்துறையின் டிஜிட்டல் ரேடாரில் சிக்கியுள்ளது. அப்படி போலி ரசீதுகள் மூலம் அதிக ரீஃபண்ட் பெற்றதாகக் கருதப்படும் நபர்களுக்கு, வருமான வரி துறையானது நோட்டீஸ்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. ஒரு சிறு சலுகைகளுக்காக செய்த தவறு, உங்களுக்கு அபராதம் அல்லது சில சமயங்களில் தண்டையைக் கூட பெற்றுத் தரலாம்.

எக்ஸ் தளத்தில் என்ன?
அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குப் போலியான நன்கொடைகளை காட்டி, வரிச் சலுகை கோரிய வரி செலுத்துவோர் மீது வருமான வரித்துறை ஆனது தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதற்கு இடைத்தரகர்கள் மற்றும் முகவர்கள் அடங்கிய ஒரு நெட்வொர்க், போலியான சலுகைகளுக்கு உதவி உள்ளதாகவும், இதனால் சட்டவிரோத ரீஃபண்டுகள் மற்றும் வரி கணக்குகள் குறைந்துள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தவறுகள் செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் போலியாக கணக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தவறுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் முன்பே, அதை சரி செய்து கொள்ளவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து வருமான வரித் துறையானது எக்ஸ் தளத்தில் போலியான சலுகைகளைக் கோருவதற்கு எதிராக, வரி செலுத்துவோரை எச்சரித்துள்ளது.
முகவர்கள் மூலம் தவறான சலுகைகள்
வருமான வரித்துறையின் அறிக்கையின் படி, கமிஷன் அடிப்படையில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்த அகில இந்திய அளவிலான ஒரு இடைத்தரகர்களின் நெட்வொர்க் கண்டறிந்துள்ளது. அவர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள சலுகைகளை, தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதில் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் நன்கொடை செலுத்தியதாக காட்டப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் பலர் உண்மையில் பணம் செலுத்தாமல் நன்கொடை ரசீதுகளைப் பெற்றுள்ளது தான்.
மேலும் போலியான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், செயல்படாமல் இருப்பதையும், வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருப்பதையும், உண்மையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதையும் கண்டறிந்துள்ளதாக வருமான வரித் துறையானது கூறியுள்ளது. இந்த நிறுவனங்களில் பலவும் போலியான நன்கொடை ரசீதுகளை வழங்கும் அதே வேளையில், கணக்கில் வராத பணம் மற்றும் எல்லை தாண்டிய பணம் அனுப்பும் பரிவர்த்தனை செய்வதற்கான ஒரு வழித்தடமாக பயன்படுத்தப்படுவதாகவும் வருமான வரித்துறை நம்புகிறது. இதுபோன்ற பல அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அமைப்புகளில் சோதனை நடத்தப்பட்டபோது, தனிநபர்களின் போலி நன்கொடைகள் மற்றும் தவறான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) கோரிக்கைகளுக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
முக்கிய பிரிவுகளில் கவனம்!
மத்திய நேரடி வரிகள் வாரியமானது, பிரிவு 80ஜி(80G) மற்றும் 80ஜிஜிசி (80GGC) ஆகியவற்றின் கீழ் வரிச் சலுகை கோரப்பட்ட சந்தேகத்திற்கு உரிய சலுகைகளையும் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழங்குகள் அதிக ரிஸ்க்குள்ளதாக கவனத்தில் எடுத்துக் கொள்ள பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
வரிகள் வாரியமானது விடுத்த எச்சரிக்கையை அடுத்து பலரும், நடப்பு மதிப்பீட்டு ஆண்டு உட்பட, ஏற்கனவே தங்கள் வருமான வரி கணக்குகளை தானாகவே திருத்தி தாக்கல் செய்துள்ளதாகவும், சிலர் முந்தைய ஆண்டுகளுக்கான திருத்தப்பட்ட கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தையும், கடுமையான ஆய்வுகளையும் தவிர்த்து விட்டனர் என தெரிவித்துள்ளது.
NUDGE பிரச்சாரம்?
ஓருவர் தானாகவே சட்டங்களுக்குக் கட்டுப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் வருமான வரித்துறை NUDGE என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி செலுத்துவோருக்கு, அவர்களின் வரி கணக்குகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி SMS மற்றும் மின்னஞ்சல் எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. அதன் மூலம் சட்ட அமலாக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன், உண்மையான தவறுகளைச் சரி செய்ய ஒரு வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என விவரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை புறக்கணித்தால், கடுமையான ஆய்வு மற்றும் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.
வரி செலுத்துவோருக்கு அட்வைஸ்?
வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யும் போது, சரியான மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைக் குறிப்பிடுவதை உறுதி செய்யுமாறு நிதி அமைச்சகம் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இது துறையிடமிருந்து சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் மற்றும் முக்கியமான தகவல்தொடர்புகளைப் பெற உதவும் என கூறியுள்ளது. மேலும் தகுதியான சலுகைகள் அல்லது புதுப்பிக்கப்பட்ட வரி கணக்குகளை தாக்கல் செய்யும் செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களை தேடும் வரி செலுத்துவோர், அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்தைப் பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications