தமிழ்நாட்டின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹட்சன் அக்ரோ நிறுவனம், மில்க் மந்திரா என்ற பால் உற்பத்தி நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. 233 கோடி மதிப்பீட்டில் இந்த விற்பனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா, ஹட்சன், ஐபேக்கோ ஆகிய பிராண்டுகளின் தாய் நிறுவனம் தான் ஹட்சன் அக்ரோ நிறுவனம்.
ஹட்சன் அக்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் 233 கோடிக்கு மில்க் மந்த்ரா டைரி நிறுவனத்தை நாங்கள் கையகப்படுத்த இருக்கிறோம், இதன் மூலம் இந்த நிறுவனத்தின் முழு பங்குகளும் எங்கள் வசம் வர இருக்கிறது என கூறியுள்ளது. மில்க் மந்திரா நிறுவனம் இதன்பிறகு ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மில்க் மந்திரா நிறுவனம் ஒடிசா மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. பால் மற்றும் பால் பொருட்களை மில்கி மூ என்ற பிராண்டின் கீழ் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே ஹட்சன் நிறுவனம் ஹட்சன், ஆரோக்கியா, ஐபேக்கோ, அருண் ஐஸ்கிரீம் ஆகிய பிராண்டுகளின் கீழ் பால், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
கிழக்கு மாநிலங்களிலும் தன்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு அதன் ஒரு பகுதியாக தான் மில்க் மந்திரா நிறுவனத்தை ஹட்சன் வாங்கி இருக்கிறது. மில்க் மந்திரா நிறுவனம் 2024 ஆம் நிதி ஆண்டில் 276 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது. இதில் 9 கோடி ரூபாய் நிகர லாபம் ஆகும். 2023ஆம் ஆண்டு 12 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி மில்க் மந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டிலேயே சுமார் 9 கோடி லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாறி இருக்கிறது.
அண்மையில் தான் ஒடிசா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் 200 மில்லி பால் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை மில்க் மந்திரா நிறுவனமே பெற்றிருந்தது. லாபமகரமாகவும் வருங்காலத்தில் வளர்ச்சி அடையும் நிறுவனமாகவும் இருப்பதாலேயே ஹட்சன் நிறுவனம் இதனை கையகப்படுத்தியுள்ளது.
இந்த கையகப்படுத்தல் மூலம் ஹட்சன் நிறுவனம் பெருமளவில் லாபம் ஈட்டப் போகிறது என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 23 சதவீதம் இந்தியாவில்தான் உற்பத்தி ஆகிறது. பால் மட்டுமில்லாமல் தயிர், பன்னீர், ஐஸ்கிரீம் என பால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு இந்தியாவில் எப்போதுமே டிமாண்ட் இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications