இந்திய நடுத்தரக் குடும்பத்தில் நீங்க வளர்ந்தவர் என்றாலோ, அல்லது 90 கிட்ஸ் ஆக நீங்கள் இருந்தால் கட்டாயம் 1 கோடி ரூபாய்க் கொடுத்தால் நீங்க என்ன செய்வீங்க..?!! என்ற கேள்வி வாழ்க்கை ஒரு முறையாவது உங்களிடம் கேட்டு இருப்பார்கள்.
ஆனால் இன்று 90 கிட்ஸ் அனைவரும் வேலைக்குச் சென்றும் சம்பாதிக்கத் துவங்கியுள்ள நிலையில், இப்போது கேட்க வேண்டிய கேள்வி 1 கோடி ரூபாய் பணத்தைச் சம்பாதிக்க என்ன செய்வீங்க என்பது தான்.
ஒரு கோடி ரூபாய் என்ற தொகை மிகப்பெரியதாக இருந்தாலும் அனைவருக்கும் சாத்தியம் தான், ஆனால் அதை எப்படிச் செய்வது என்பது இங்கே பார்க்கப்போகிறோம்.
நடுத்தர மக்கள்
நடுத்தரப் பொருளாதாரப் பிரிவு மக்களுக்கு மிகப்பெரிய நிதி இலக்குகளில் ஒன்று பாதுகாப்பான ஓய்வூதிய நிதியை உருவாக்குவது தான். உங்களின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி 1 கோடி ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால் உங்களுக்குப் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறந்த வழியாகும்.
PPF திட்டம்
PPF திட்டம் மூலம் பெரும் தொகையை உருவாக்குவது மட்டுமல்ல, இது உங்கள் பாதுகாப்பான முதலீடாகவும் விளங்குகிறது. இந்தப் பிபிஎப் திட்ட முதலீட்டைத் தபால் அலுவலகத்திலேயே கிடைக்கும் என்பதால் உங்கள் பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
7.1 சதவீத வட்டி
அஞ்சலக PPF திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குவது மட்டும் அல்லாமல், இந்தத் திட்ட முதலீட்டாளர்களுக்குக் கூட்டு வட்டியின் பலனையும் வழங்குகிறது இந்தியா போஸ்ட் நிர்வாகம்.
15 ஆண்டுகள்
போஸ்ட் ஆபீஸ் PPF திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள், இத்திட்டத்தை 10 ஆண்டுகள் வரையில் முதிர்வு காலம் முடிந்த பின்பு நீட்டிக்கப்படலாம். இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகையின் பலனும் உள்ளது கூடுதல் சிறப்பு.
கூட்டு வட்டி வசதி
அஞ்சலக PPF திட்டத்தில் கூட்டு வட்டி வசதியுடன் (compound interest) வருவதால் உங்களுக்கு நிலையான வளர்ச்சியை வழங்குகிறது. இந்த நிலையில் உங்களின் கனவு தொகையான ஒரு கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற வேண்டும் என்றால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஒரு நாளுக்கு 417 ரூபாய் முதலீடு
அஞ்சலக PPF திட்டத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையைப் பெற முடியும். அதாவது மாதத்திற்கு 12500 ரூபாய், தினசரி முதலீட்டுத் தொகையாகக் கணக்கிட்டால் ஒரு நாளுக்கு 417 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
12500 ரூபாய் முதலீடு
உதாரணமாகப் பிரகாஷ் என்பவர் அஞ்சலக PPF திட்டத்தில் மாதம் 12500 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இத்திட்டத்தில் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். தற்போது உள்ள வட்டியை 7.1 சதவீதம் சேர்த்தால் பிரகாஷ்-க்கு 18.18 லட்சம் ரூபாய் வட்டி கிடைக்கும்.
41 லட்சம் கார்பஸ்
அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரகாஷ்-க்கு 41 லட்சம் ரூபாய் இந்தப் போஸ்ட் ஆபீஸ் PPF திட்டத்தின் மூலம் கிடைக்கும். இந்தப் பணத்தை வித்டிரா செய்யாமல் தொடர்ந்து முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டிப்பு செய்தால்.
25 வருடத்தில் 1 கோடி
25 வருடத்தில் மொத்த முதலீட்டுத் தொகை 66 லட்சமாக உயர்ந்திருக்கும்.இந்த நிலையில் 25 வருடத்திற்குப் பின்பு மொத்த முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி உடன் சேர்த்துக் கணக்கிட்டால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்.
PPF திட்ட நன்மைகள்
PPF இன் சிறந்த விஷயம் என்னவென்றால் இத்திட்ட முதலீட்டுக்கு உறுதியான வருமானத்தை அளிக்கப்படுகிறது என்பதோடு வரி சலுகையும் உள்ளது. இந்திய குடிமக்கள் மட்டுமே தபால் அலுவலகப் பிபிஎஃப் கணக்கைத் திறக்க முடியும், NRI-கள் இந்தக் கணக்கைத் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications