ரூ.1,000-த்திற்கு ஜியோ அறிமுகம் செய்த JioPC! உங்க பழைய லேப்டாப்புக்கு உயிர் கொடுக்கும் புதிய சேவை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் இயங்கும் "JioPC" சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுவரையில் இந்த சேவை ஜியோஹோம் பிராட் பேண்ட் வைத்திருந்த பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், இனி இன்டர்நெட் வசதி இருக்கும் எல்லா பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவில் JioPC என்றால் என்ன?, இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? இதற்கு கட்டணம் எவ்வளவு என்ற எல்லா விவரங்களையும் பார்ப்போம்.

JioPC என்றால் என்ன?: JioPC என்பது ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை. பழைய ஹார்டுவேர், குறைந்த மெமரி, அப்டேட் செய்ய முடியாத OS கொண்ட கம்ப்யூட்டர்கள், மெதுவாக இயங்கும் லேப்டாப்புகள் போன்றவற்றுக்காக கொண்டுவரப்பட்டது தான் JioPC. இதன் மூலம் நீங்கள் புதிய கம்ப்யூட்டரோ அல்லது லேப்டாப்போ வாங்காமல் ஜியோவின் கிளவுட் ப்ரோஸ்ட்ரக்சர் மூலம் உங்களுடைய பழைய கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க முடியும்.

ரூ.1,000-த்திற்கு ஜியோ அறிமுகம் செய்த JioPC! உங்க பழைய லேப்டாப்புக்கு உயிர் கொடுக்கும் புதிய சேவை!

ஜியோ பிசி மூலம் என்னென்ன வசதிகள் கிடைக்கிறது?: ஒரு கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க அதன் ஹார்டுவேரை மாற்ற வேண்டி வரும். ஆனால் இப்படி எதுவுமே செய்யாமல் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வசதியை கிளவுட் மூலம் பெற முடியும். இதற்காக நீங்கள் வேறு எந்த ஹார்டுவரையும் பொருத்தத் தேவையில்லை. ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் jiopc சேவையை உங்களுடைய பழைய கம்ப்யூட்டரிலேயே பயன்படுத்த முடியும்.

Also Read

3 முதல் 4 ஆண்டுகள் பழமையான கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி அல்லது 8 ஆண்டுகள் பழமையான கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி ஜியோ பிசி சேவையை எளிதில் பயன்படுத்தலாம். எல்லா வேலைகளும் சர்வர்களிலேயே ப்ராசஸ் செய்யப்படுகிறது. இதனால் உங்களுடைய கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிக்கும். இதைத்தான் தற்போது ஜியோ நிறுவனம் சப்ஸ்கிரிப்ஷன் சேவையாக பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

முக்கியமாக இந்தச் சேவை பள்ளிகள், இந்தியக் குடும்பங்கள், சிறு வணிகங்கள் போன்றவற்றுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அப்ளிகேஷன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பழைய கம்ப்யூட்டரில் புதிய சாப்ட்வேரை இயங்க வைப்பதற்கு பெரும் சிக்கலை சந்திக்கின்றனர். புதிய கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஜியோ பிசி சேவையின் மூலம் AI தொடர்பான வேலைகளை உங்களுடைய பழைய கம்ப்யூட்டரில் எளிதில் செய்து முடிக்க முடியும்.

கட்டண விபரங்கள்: jiopc சேவை தற்போது 2 பிரிவுகளில் கிடைக்கிறது. 8 ஜிபி RAM, 500 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட jiopc சப்ஸ்க்ரிப்ஷன் சேவைக்கு 2 மாத கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுகிறது. 5 மாதமாக இருந்தால் ரூ.2,000, ஒரு ஆண்டு திட்டத்திற்கு ரூ.4000 செலுத்த வேண்டும்.

ஜியோ பிசி அல்ட்ரா: இதற்கு 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, 2 மாத கட்டணமாக ரூ.1200, 5 மாத கட்டணம் ரூ.2500, 1 ஆண்டு கட்டணம் ரூ.5000. ஸ்டோரேஜ் குறைவாக இருக்கும் கம்ப்யூட்டருக்கு ஜியோ பிசி அல்ட்ரா திட்டம் ஏற்றதாக இருக்கும். அதுவே சாதாரணமாக கம்ப்யூட்டர் பயன்படுத்த விரும்புவர்கள் அடிப்படை ஜயோ பிசி திட்டத்தை பயன்படுத்தலாம். குறைந்த செலவில் உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த கிளவுட் சேவை ஒரு சிறந்த ஆப்ஷன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+