ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய 5 தொழில்கள்! வீட்டிலிருந்தே செம்மையா சம்பாதிக்கலாம்!

நம்மில் பலருக்கு சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான முதலீடு இருக்காது. புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டுமானால் அதற்கு அதிக அளவிலான முதலீடு தேவை.. வாடகைக்கு இடம் தேவை என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டிலும் நம்மால் ஒரு தொழிலைத் தொடங்க முடியும். அதுவும் வீட்டிலிருந்தபடியே செய்ய முடியும்.

அதுவும் முதல் முறையாக தொழில் தொடங்க ஆசைப்படுபவர்களுக்கு சேவை சார்ந்த தொழில் ஏற்றதாக இருக்கும். ஏனெனில் உற்பத்தி அல்லது பெரிய சில்லறை வணிகங்களை போல இதற்கு செலவுகள் அதிகம் இருக்காது.

ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய 5 தொழில்கள்! வீட்டிலிருந்தே செம்மையா சம்பாதிக்கலாம்!

டியூஷன்: ஆரம்பத்தில் இதற்கு ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை முதலீடு செய்தால் போதுமானது. உங்களுக்கு கற்பிக்கும் திறன் இருந்தால் வீட்டில் இருந்தே டியூஷன் எடுக்கலாம். வீட்டில் இருக்கும் ஒரு காலி அறையே போதுமானது. இதற்காக வாடகைக்கு இடம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நாற்காலிகள், விளம்பர செலவுகள், மேசைகள், ஆசிரியரை நியமித்து டியூஷன் எடுத்தால் அவருக்கான சம்பளம் ஆகியவற்றுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

Also Read

20 மாணவர்களுக்கு தலா ரூ.1500 கட்டணமாக வசூலித்தாலே மாதத்திற்கு ரூ.30,000-த்திற்கும் மேல் வருமானம் கிடைக்கும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கூடுதல் வருமானமும் இதன் மூலம் சாத்தியமே. ஆன்லைனிலும் வகுப்புகளை எடுக்கலாம்.

சோசியல் மீடியா மார்க்கெட்டிங்: இன்றெல்லாம் வணிகம் செய்பவர்கள் மக்களை சென்றடைவதற்கு அதிகம் சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது கிராபிக் டிசைனிங் போன்றவற்றில் உங்களுக்கு திறமை இருந்தால் வீட்டிலிருந்தே செய்து கொடுத்து வருமானம் பார்க்கலாம். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களை நிர்வகித்தல், விளம்பரம் உருவாக்குதல், ரீல்ஸ் வீடியோ எடிட் செய்தல் போன்ற சேவைகளை வீட்டில் இருந்தபடியே வழங்கலாம். ஒரே ஒரு லேப்டாப் மற்றும் இன்டர்நெட் வசதி இருந்தால் போதுமானது. வெறும் 5 நிறுவனங்களுக்கு மாதத்திற்கு ரூ.8000 என்ற வீதத்தில் சேவை வழங்கினாலே மாதத்திற்கு 40,000 வரை வருமானம் பெறலாம்.

ஆரம்பத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் போன்றவற்றுக்கு நீங்கள் என்னென்ன சேவை வழங்குகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துவது அவசியம், இதற்காக லைசன்ஸ் எதுவும் பெறத் தேவையில்லை.

டைலரிங்: டைலரிங் தெரிந்தால் மிகக் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்கலாம். ஆரம்பத்தில் தையல் மெஷின் மற்றும் துணி நறுக்கும் கருவிகளை வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழிலை தொடங்கிவிட்டால் போதும் பேண்ட், சட்டை ஆல்ட்ரேஷன், பிளவுஸ், கிழிந்த ஆடைகளை தைத்து தருதல் என சின்ன சின்ன வேலைக்கும் வீட்டிலிருந்தே கட்டணம் வசூலிக்கலாம். ஒரு நாளைக்கு எட்டு ஆடைகளை தைத்துக் கொடுத்தால் மாதத்திற்கு தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் ஈட்ட முடியும். அதுவும் பிளவுஸ் தைத்து தர இன்றைய டெய்லர்கள் ரூ.300 முதல் ரூ.1000 வரை சார்ஜ் செய்கின்றனர்.

வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்யும் சேவைகள்: இந்த தொழிலை தொடங்க பெரிதாக கடை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீடு, அலுவலகங்கள், குளியலறை, சமையலறை போன்றவற்றை சுத்தம் செய்யும் சேவையை வழங்கலாம், இதற்கு வேக்கம் கிளீனர் மற்றும் இதர உபகரணங்களை வாங்க வேண்டி இருக்கும், மாதத்திற்கு 20 ஆர்டர்கள் கிடைத்தால் ரூ.3000 என்ற கட்டணத்தில் ரூ.60,000 வரை வருமானம் ஈட்ட முடியும். அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், அலுவலகம் போன்றவற்றுக்கு மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் முறையில் சேவை வழங்கினால் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.

கார் பைக், வாஷிங் சேவை: இந்த சேவையை வழங்குவதற்கு தனியாக அலுவலக இடங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை. சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று வாகனங்களை சுத்தம் செய்து தரலாம். இதற்கும் வேக்கம் கிளீனிங் லிக்விட் போன்றவற்றை வாங்க வேண்டும். பெருநகரங்களில் வசிக்கும் கார் மற்றும் பைக் உரிமையாளர்களுக்கு இந்த சேவை பெரிதும் உதவியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+