ஹோம்லோன் வாங்கியுள்ளீர்களா?. ரெப்போ விகிதம் குறைவதால் என்ன Benefit.. சேமிப்பை அதிகரிப்பது எப்படி?

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ரெப்போ விகிதம் 6.25 சதவிகிதமாகவே உள்ளது. அதாவது ரெப்போ விகிதம் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக எந்த விதமான மாறுதலும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்திருப்பதால் 6.5%லிருந்து 6.25%ஆக தற்போது இருக்கிறது. 5 ஆண்டுகளில் ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டிருக்கிறது மற்றும் மாறாமல் அதே ரெப்போ ரேட் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. தற்போது குறைக்கப்பட்டு இருப்பதால் வங்கிகளில் கார், வீடு லோன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்த வட்டி விகிதம் குறைப்பு அவர்கள் மாதம் கட்டவேண்டிய emi-ல் குறிப்பிட்ட தொகை குறைய வழிவகை செய்யும்.

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பது ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்களுக்கு emi தொகையை குறைக்க உதவும். அதேபோல இனிமேல் வீட்டுக்கடன் வாங்குபவர்கள் வீட்டுக்கடன் வாங்கும்போது அவர்களின் கடன் சுமை குறையும். எப்படி கடனில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம். அந்தவகையில், கடனை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் சேமிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து நிபுணர்களின் ஆலோசனைகள் குறித்து பார்க்கலாம்.

ஹோம்லோன் வாங்கியுள்ளீர்களா?. ரெப்போ விகிதம் குறைவதால் என்ன Benefit.. சேமிப்பை அதிகரிப்பது எப்படி?

கடன்களை முன்கூட்டியே செலுத்துதல்: ஒருநபர் ரூ.40 லட்சம் வீட்டுக் கடனை வெறும் ஐந்து ஆண்டுகளில் அடைக்கவேண்டும் என்றால், தனது போனஸ் மற்றும் குறைவான முதலீடுகளை கொண்டு முன்கூட்டியே கடனை செலுத்தி தனது வட்டிச் செலவுகளைக் குறைக்கலாம். இதேபோல், ஒரு நபர் தான் தேர்ந்தெடுத்த ஓவர் டிராஃப்ட் வீட்டுக் கடன் மூலம், தனது ரூ.1.08 கோடி கடனை, ஒரு வருடத்திற்குள் அடைத்து ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான வட்டியை சேமிக்கலாம். உதாரணத்திற்கு ஓவர் டிராஃப்ட் கணக்கில் ரூ.8-15 லட்சம் இருப்பு வைத்திருக்கும்போது, அசலைக் குறைத்து, செலுத்த வேண்டிய வட்டியைக் குறைக்க உதவும். ஏற்ற இறக்கமான பணப்புழக்கங்களைக் கையாளும் சுயதொழில் செய்பவர்கள் இந்த அணுகுமுறையை பின்பற்றலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரெப்போ விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.

நிபுணர்களின் ஆலோசனையின்படி, ஒவ்வொரு ஆண்டும் நிலுவையில் உள்ள கடனில் 5 சதவீதத்தை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் மொத்த வட்டி செலுத்துதல்களை பாதியாகக் குறைத்து, கடன் காலத்தை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு போனஸ், வரி திருப்பிச் செலுத்துதல் அல்லது எதிர்பாராத நிதி லாபங்களைப் பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்தக் கணக்குகள் முறையான முன்கூட்டியே செலுத்தும் நடைமுறைகள் இல்லாமல் நெகிழ்வான அசல் குறைப்புகளை வழங்குகின்றன.

முன்கூட்டியே செலுத்துவதா அல்லது முதலீடு செய்வதா? கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதை விட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை விட ஈக்விட்டி அதிக வருமானத்தை அளிக்கிறது. ஆனால், ஈக்விட்டி நீண்ட காலத்திற்கு 10-12 சதவீத வருமானத்தை வழங்கக்கூடும், ஆனால் சந்தை ஏற்ற இறக்கம் ஒரு ஆபத்தாக மாறும் என்றும் எச்சரிக்கின்றனர்

மேலும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு கடன் வாங்குபவர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், நிபுணர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் வெளிப்படுத்துவது போல், கடன் திருப்பிச் செலுத்துதலை விரைவுபடுத்துவதற்கும் நிதி சுதந்திரத்தை அடைவதற்கும் ஒழுக்கமான நிதி திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை உத்திகள் மிக முக்கியமானவை என்று அறிவுறுத்துகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+