பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) திட்டத்தின் 18-வது தவணையை அக்டோபர் 5-ஆம் தேதியான நேற்றைய தினம் வெளியிட்டார். இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டின் நலிவுற்ற விவசாயிக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தும் உங்களுக்கு தவணை இன்னும் வரவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. பல்வேறு காரணங்களுக்காக தாமதங்கள் நிகழலாம். மேலும் சிக்கலைத் தீர்க்கவும், உங்கள் நிதி உதவியை பெறுவதை உறுதி செய்யவும் நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
PM கிசான் திட்டத்தின் 18-வது தவணை கேஒய்சி செயல்முறையை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு அரசாங்கம் கேஒய்சி செயல்முறையை கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த முக்கியமான பணியை தங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் அல்லது பொது சேவை மையத்திற்கு சென்று முடிக்கலாம்.

உங்கள் இ-கேஒய்சி தகவலை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது எதிர்காலத்தில் PM கிசான் திட்டத்தின் மூலம் எந்தவித தாமதமும் இன்றி பணத்தை பெறுவதை உறுதி செய்யும். நீங்கள் PM கிசான் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் தவணையை பெறாத விவசாயியாக இருந்தால் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
ஏதேனும் காரணத்திற்காக உங்களுக்கு PM கிசான் திட்டத்தின் 2000 ரூபாய் வரவில்லை என்றால் பிரச்சனை தீர்க்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தவணைகள் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தும் தவணைத் தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் எளிதில் புகார் செய்யலாம். ஆனால் முதலில் பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதை எப்படி தெரிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.
முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary list" என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க "Get Report" என்பதைக் கிளிக் செய்யவும். இது தவிர, உள்ளூர் ஊராட்சிகளிலும் பயனாளிகள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.
புகாரை எப்படி பதிவு செய்வது?: PM கிசான் ஹெல்ப்லைன் டெஸ்க் மூலம் நீங்கள் புகார் செய்யலாம். தகுதியான விவசாயிகள் திங்கள் முதல் வெள்ளி வரையில் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். உங்களின் குறைகளை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
மின்னஞ்சல் ஐடி: [email protected]. மற்றும் [email protected].
PM-கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 011-24300606,155261-ஐ அழைக்கவும்
PM கிசான் இலவச டோல் ஃப்ரீ நம்பர்: 1800-115-526.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications