ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் (எச்எம்பிஎல்) நிறுவனம் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. 1992ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் ஒப்பந்த சேவைகளை வழங்குவதில் குறிப்பாக சாலை கட்டுமான திட்டங்களில் நல்ல பெயர் வாங்கிய நிறுவனமாகும். மேலும், இந்நிறுவனம் அரசாங்கத்தால் வழங்கப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு துணை ஒப்பந்ததாரராக அடிக்கடி பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது மற்றும் இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கி வருவதால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், மும்பையின் வெர்சோவா பாந்த்ரா கடல் இணைப்பு திட்டத்திற்கான ஸ்டீல் கட்டமைப்பு கட்டுவற்காக வெங்கடேஷ் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.102.10 கோடி மதிப்பிலான ஆர்டரை நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவித்தது. இதன் எதிரொலியாக அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.81 சதவீதம் உயர்ந்து ரூ.42.70ஆக இருந்தது.

ரூ.50க்கும் குறைவான இந்த ஸ்மால்கேப் பங்கு 2022 பிப்ரவரியில் ரூ.9-10 என்ற அளவில்தான் சந்தையில் வர்த்தகமாகியது.ஆனால் தற்போது ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் பங்கின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 26,600 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 1.36 சதவீதம் குறைந்துள்ளது. 2025ம் ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் பங்கின் விலை ரூ.42.70ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 குறைந்தபட்ச விலையை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. 2024 மார்ச் 28ம் தேதியன்று இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.28.41க்கு சென்றது. கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார அதிகபட்சமான ரூ.63.90ஐ எட்டியது. இந்நிறுவனம் கடந்த மாதம் 27ம் தேதியன்று, க்ரீன் எனர்ஜி வணிகத்தில் களம் இறங்க உள்ளதாகவும், மகாராஷ்டிராவின் முதல் சோலார் பகுதியை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆர்டர்கள் வரத்து அதிகரிப்பு, புதிய வணிகத்தில் களம் இறங்குவது போன்றவை இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையாக விளங்கும்.
Story Written:Subramanian
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications