இந்தியாவின் ஹார்டுவேர் தந்தை என வர்ணிக்கப்பட்ட அஜய் சௌத்ரி தனது ரூ.600 மாத சம்பள வேலையை உதறிவிட்டு நாட்டின் ஐடி துறையில் புதிய சகாப்தத்தைப் படைத்தார். ஐஏஎஸ் அதிகாரிக்கு மகனாகப் பிறந்த அஜய் சௌத்ரியின் குடும்பம் இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் ஒரு அகதிகள் முகாமில் வசித்தது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 6 நிறுவன உறுப்பினர்களில் அஜய் சௌத்ரியும் ஒருவர். அவருடன் அர்ஜுன் மல்ஹோத்ரா, இந்தியாவின் நான்காவது பணக்காரரான ஷிவ் நாடார் அடங்குவர்.

ஜபல்பூரில் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்த சௌத்ரி தனது கேரியரை தொடங்கினார். படிப்பை முடித்தபின் இந்தியாவின் டெக்னாலஜி புரட்சியில் பெரும் பங்கை வகிக்கும் நிறுவனத்தில் ஒரு அங்கமாக இருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
டிசிம் டேட்டா புராடக்ட்ஸில் விற்பனைப் பிரிவில் தனது வேலையைத் தொடங்கினார் அஜய். அந்த சமயத்தில் இந்தியாவின் கம்ப்யூட்டர் தொழில்துறையில் டிசிஎம் டேட்டா புரோடக்ட்ஸ் மிகப் பெரிய நிறுவனமாக திகழ்ந்தது. அவருக்கு அப்போது மாதச் சம்பளம் ரூ.600. இந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தபோது ஷிவ் நாடார், மல்ஹோத்ரா ஆகியோரை அஜய் சௌத்ரி சந்தித்தார்.
அவர்கள் இணைந்து தங்களுக்கென ஒரு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தனர். அதன்படி தங்கள் நிறுவனத்துக்கு Micro comp எனப் பெயரிட்டனர். பின்னர் இது HCL எனப் பெயர் மாற்றப்பட்டது. ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டெடின் சுருக்கமே ஹெச்சிஎல். வெறும் ரூ.1.8 லட்சம் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
இன்றைக்கு நாட்டின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.3,20,000 கோடியாகும்.
தொடக்கக் காலத்தில் சௌத்ரி ஹெச்சிஎல்லின் தென்னிந்திய விற்பனையை கவனித்து வந்தார்.
சென்னையை விட்டு வெளியே குடியேறிய சௌத்ரி தனது டீமுடன் சேர்ந்து மிகப்பெரிய பிசினஸ் ஹப்பை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் இதேபோன்ற ஹப்பை உருவாக்கினார். இதை தொடர்ந்து சீனா, ஹாங்காங் என சர்வதேச சந்தையிலும் விரிவுபடுத்தினார். 1999-2012 காலகட்டத்தில் ஹெச்சிஎல் நிறுவனத் தலைவராக சௌத்ரி பதவி வகித்தார்.
2011 ஆம் ஆண்டில் இந்திய குடிமகன்களுக்கான உயரிய விருதான பத்ம பூஷனை சௌத்ரி பெற்றார். ஒரு மென்டார், கல்வி மற்றும் ஆர்வலராகவும் சௌத்ரி விளங்கினார். IIT Hyderabad மற்றும் IIT Patna வின் போர்டுகளில் உறுப்பினராக பணியாற்றினார். FICCIயின் தலைவராகவும் பணியாற்றினார்.
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துரையின் செமி கண்டக்டர்ஸ்கான ஆலோசனை போர்டில் ஒரு உறுப்பினராக சௌத்ரி பதவி வகித்தார். 2021 ஆம் ஆண்டில் லாபநோக்கற்ற EPIC அறக்கட்டளையை இணைந்து தொடங்கினார்.


Click it and Unblock the Notifications