இந்திய ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு அதிகமாகச் சம்பளம் கொடுப்பதை காட்டிலும் சிஇஓ-க்களுக்கு நிர்வாகம் அதிகப்படியான சம்பளத்தைக் கொடுத்து வருகிறது. இதனால் இந்திய ஐடி சேவை துறையில் யார் அதிகப்படியான சம்பளம் வாங்குகிறார்கள் என்பதில் ஒவ்வொரு வருடமும் கடுமையான போட்டி நிலவுகிறது.
மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டுக்கான சம்பளத்தை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அறிவித்து வரும் நிலையில், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது ஹெச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-வை முந்திய விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் -வை தற்போது ஹெச்சிஎல் விஜயகுமார் முந்தியுள்ளார்.
HCL CEO விஜயகுமார்
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் கடந்த ஆண்டு 123.13 கோடி ரூபாய் ($16.52 மில்லியன்) அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
இவருடைய சம்பளத்தில் நான்கில் மூன்று பங்கு நீண்ட கால இன்சென்டிவ் ஆக உள்ளது.
123.13 கோடி ரூபாய்
இதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி துறையில் நிறுவனங்கள் மத்தியில் அதிகச் சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக விஜயகுமார் உயர்ந்துள்ளார். மேலும் இப்பட்டியலில் முதல் இடத்தல் இருந்த விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே மற்றும் இன்போசிஸ் சலில் பாரிக் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.
சம்பள பங்கீடு
மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விஜயகுமார் அடிப்படை சம்பளமாக 2 மில்லியன் டாலர், வேரியபிள் பே 2 மில்லியன் டாலர், 0.02 மில்லியன் டாலர் இதர சலுகைகள், 12.50 மில்லியன் டாலரை நீண்ட கால இன்சென்டிவ் ஆகப் பெற்றுள்ளார்.
நீண்ட கால இன்சென்டிவ்
இந்த நீண்ட கால இன்சென்டிவ் என்பது கடந்த 2 ஆண்டுகளுக்கானது என விளக்கம் கொடுத்துள்ளது. இதன் மூலம் விஜயகுமாரின் சம்பளம் 16.52 மில்லியன் டாலர் அதாவது 123.13 கோடி ரூபாயாகும். இதேபோல் நீண்ட கால இன்சென்டிவ் சேர்க்கப்படாவிட்டால் இவருடைய சம்பளம் 4.13 மில்லியன் டாலர் தான்.
விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்
இந்தியாவில் 3வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்ட் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கு சுமார் 79.8 கோடி ரூபாய் ($10.51 மில்லியன்) அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். கொரோனா தொற்று லாக்டவுன் கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்த ஜூலை 2020 இல் தியரி டெலாபோர்ட் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாகச் சேர்ந்தார்.
இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்
இந்தியாவின் 2வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலில் பாரிக்-ன் 2021-22ஆம் ஆண்டுக்கான சம்பளம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 71 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமாகப் பெற்றார் சலில் பாரிக்.
சலில் பாரிக்
இந்தத் திடீர் உயர்வு கடந்த ஆண்டுச் சலில் பாரிக்-கிற்கு அளிக்கப்பட்ட பங்குகள் மூலம் கிடைத்த கூடுதல் வருமானமும், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் வேரியபிள் பே-வில் ஏற்பட்ட உயர்வும் தான் முக்கியக் காரணம்.
டிசிஎஸ், விப்போ, இன்போசிஸ், ஹெச்சிஎல்
மார்ச் 2020ல் ஹெச்சிஎல் விஜயகுமார் பெற்ற சம்பளத்தை வைத்து கணக்கிட்டால் கடந்த நிதியாண்டுக்கு 10.27 மில்லியன் டாலர் தான் அவருடைய சம்பளம். இதேவேளையில் விப்ரோ தியரி டெலாபோர்ட்டே-வின் சம்பளம் 10.5 மில்லியன் டாலர், இன்போசிஸ் சலில் பாரிக் சம்பளம் 10.2 மில்லியன் டாலர், டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன் சம்பளம் 3.3 மில்லியன் டாலர் மட்டுமே.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications