உத்தரபிரதேசம்: இந்தியாவில் ஹெச்சிஎல் நிறுவனமும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து Outsourced Semi-Conductor Assembly and Testing unit (OSAT) எனப்படும் செமிகண்டக்டர் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை ஆலையை அமைக்க இருக்கின்றன.
இந்த ஆலை உத்திரபிரதேச மாநிலத்தில் அமைய இருக்கிறது. ஹெச்சிஎல் நிறுவனமும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கூட்டு நிறுவனமாக இதனை நடத்த உள்ளன. இந்த ஆலையை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இந்த கூட்டு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் எல்&டி நிறுவனம் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒரு ஆலையை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றி அதன் வடிவமைப்பு ,அதற்கான பொறியியல் மற்றும் கட்டுமான பணி , இறுதியில் ஆலை செயல்பாட்டுக்கு வருவது ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களை தான் EPC என அழைக்கிறார்கள் . அதாவது Engineering, Procuremnet, Construction என்பது இதன் அர்த்தம். எல்&டி இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.
அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் செமிகண்டக்டர் பிரிவுக்கான தலைவர் பாப்சிங் குஜராத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது ஹெச்சிஎல் நிறுவனமும் இணைந்து எல்&டி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது ஒரு ஆரம்ப கட்ட ஆலோசனை தான் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெச்சிஎல், ஃபாக்ஸ் கான் இணைந்து உருவாக்கக்கூடிய இந்த கூட்டு நிறுவனத்திற்கு இந்த மாத இறுதிக்குள்ளேயே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் எந்த நிறுவனத்திடம் கட்டுமான பணிகளை ஒப்படைப்பது என்ற முடிவு அறிவிக்கப்படும் என ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலையானது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 40 சதவீத ஈக்விட்டி பங்குகள் ஃபாக்ஸ் கான் வசமும் மீதமுள்ள பங்குகள் ஹெச்சிஎல் வசமும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த ஆலைக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் 37.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. அதேவேளையில் எல்&டி நிறுவனத்திற்கு போட்டியாக தைவானை சேர்ந்த சிடிசிஐ நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏனெனில் ஃபாக்ஸ் கான் நிறுவனத்தின் சென்னை வளாகத்தை கட்டமைத்துக் கொடுத்தது சிடிசிஐ நிறுவனம் தான்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை பெறுவதில் எல்&டிக்கும் சிடிசிஐ நிறுவனத்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் யமுனா எக்ஸ்பிரஸ்வே பகுதிக்கு அருகிலேயே இந்த ஆலையை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications