தைவான் நாட்டின் முன்னணி ஒப்பந்த உற்பத்தியாளரான பாக்ஸ்கான் மற்றும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் பிரிவில் OSAT தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து பல மாதங்களாக மத்திய அரசிடம் மானியம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வந்த நிலையில் இன்று முக்கியமான அப்டேட் வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் என்னும் பகுதியில் இந்தியாவின் ஆறாவது செமிகண்டக்டர் ஆலையை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலை, HCL மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் சுமார் ரூ.3,706 கோடி முதலீட்டில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

யமுனா எக்ஸ்பிரஸ் தொழிற்பேட்டையில் அமையவுள்ள இந்த ஆலை, மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஆட்டோமொபைல்கள் மற்றும் பிற டிஸ்பிளே சாதனங்களுக்கான டிஸ்பிளே டிரைவர் சிப்களை உற்பத்தி செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, இந்தியாவின் உள்நாட்டு செமிகண்டக்டர் உற்பத்தியை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதற்கும் முக்கியமான படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" முயற்சிக்கு புதிய உந்து சக்தியாக இருக்கும் என தெரிகிறது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் கூட்டணியில் உருவாகும் இந்த ஆலையில் 2027ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆலையில் ஒரு மாதத்திற்கு சுமார் 20000 செமிகண்டக்டர் வேஃப்பர்களை தயாரிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். மேலும் டிசைன் அவுட்புட் திறன் மாதத்திற்கு 3.6 கோடியாக இருக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 5 செமிகண்டக்டர் ஆலைக்கு ஒப்புதல் அளித்து கட்டுமானத்தில் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது, இந்த நிலையில் 6வது செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய செமிகண்டக்டர் ஆலைக்காக பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் கூட்டணி யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) பகுதியில் தான் தற்போது 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் கூட்டணியில் 37.2 மில்லியன் டாலர் முதலீடு செய்து பாக்ஸ்கான் 40% பங்குகளை கைப்பற்ற உள்ளது. மீதமுள்ள 60 சதவீத பங்குகளைத் தமிழரான ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா தலைமையில் இயங்கும் ஹெச்சிஎல் குழுமம் வைத்திருக்கப் போகிறது.
ஹெச்சிஎல், அதன் தலைமையகம் நொய்டாவில் இருப்பதால் உத்தரப்பிரதேசத்தில் இந்த புதிய தொழிற்சாலையை அமைக்க HCL நிர்வாகம் விரும்புவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதேபோல் உத்தரப்பிரதேச அரசும் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்பவர்களுக்குப் பல வகையில் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications