ஒரே நாளில் 20% ஏற்றம்.. என்ன ஆச்சு இந்த ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டமுக்கு..!

ஹெச்.சி.எல் எண்டர்பிரைசஸ் குழுமத்தினை சேர்ந்த ஹெச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று ஒரே நாளில் மட்டும் 20 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.

ஹெச்.சி.எல் குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 20 சதவிகிதம் அதிகரித்து, 8.79 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

ஒரே நாளில் 20% ஏற்றம்.. என்ன ஆச்சு இந்த ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டமுக்கு..!

இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் முழு உரிமையாளரான ஹெச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸின் விற்பனையை முடிவு செய்த பின்னர் தான், இந்த பலத்த ஏற்றம் என்றும் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தை வர்த்தகத்திற்கு பின்னர், இந்த நிறுவனம் பரிவர்த்தனைக்கு அனுப்பிய அறிக்கையில், பங்குகள் முழுமையும் விற்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 39.92 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 33 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாராத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 71.86 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 72 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,284 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,884 ஆக முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் மிகப்பெரிய நஷ்டத்தினையே கடந்த காலாண்டில் கண்டிருந்தாலும் ஏர்டெல் 16 சதவிகிதம் ஏற்றம் கண்டு, 406 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதே எஸ்.பி.ஐ 3 சதவிகித ஏற்றத்துடன் 325 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இதே யெஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தில் முதன்மையாகவும் வர்த்தகமாகியுள்ளன. இதே பிரிட்டானிய பஜாஜ் ஆட்டோ, மகேந்திரா அன்ட் மகேந்திரா, ஹீரோமோட்டோ கார்ப் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும் காணப்படுகிறது. இது தவிர யுபிஎல், டாடா ஸ்டீல், பபார்தி ஏர்டெல், பாரத் பெட்ரோலியம், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல மாற்றத்துடனும் வர்த்தகமாகியும் முடிவடைந்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+