தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐடி வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் தான் பயணிக்க வேண்டும். குடும்பத்தினரை விடுத்து இந்த பெரு நகரங்களுக்கு ஐடி வேலைகளுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் படையெடுக்கின்றனர்.
பெரிய , பெரிய நகரங்களில் ஐடி வேலை கிடைத்தாலும் அங்கே ரூம் வாடகை தொடங்கி அனைத்துமே காஸ்ட்லியாக இருக்கிறது என்பதால் சம்பாதிக்கும் பணம் அதற்கு செலவிடவே சரியாக இருக்கிறது. இதனை தாண்டி வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.

வேலைவாய்ப்புக்காக நிறைய பேர் சென்னை போன்ற நகரங்களுக்கு வருவதால் இங்கே மக்கள் தொகை அதிகரிக்கிறது. ஆனால் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல், மழை காலங்களில் வெள்ளம் என பல சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது.
எனவே தான் அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி வேலைகளை கொண்டு வந்தால் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் அங்கேயே வேலைவாய்ப்பு பெறுவார்கள். இது அந்த மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஐடி படிப்பை முடித்து வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகின்றனர். இவர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் ஐடி வேலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மதுரையில் எல்காட் ஐடி பூங்கா நிறுவப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரையில் தன்னுடைய ஐடி அலுவலகத்தை நிறுவி பலருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல். இந்த நிறுவனம் மதுரையில் மேலும் தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இலந்தைகுளம் எல்காட் ஐடி பூங்காவில் தான் தற்போது hcl அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு 2.41 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கே 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அலுவலகத்தை நிறுவ ஹெச்சிஎல் முடிவு செய்து இருக்கிறது. இந்த அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் கூடுதலாக 1500 ஐடி ஊழியர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஹெச்சிஎல் நிறுவனம் இங்கே விரிவாக்கம் செய்கிறது என்றால் அதற்கேற்ற மனித வளம் இங்கே கிடைக்கிறது என்று தான் அர்த்தம். இதன் மூலம் மேலும் பல நிறுவனங்களும் தங்களின் ஐடி அலுவலகங்களை மதுரையில் நிறுவவும் விரிவாக்கம் செய்யவும் முன்வரும். இது மதுரை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும், மதுரை நகருக்கு பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications