இந்திய ஐடி துறையில் முதல்முறையாக இப்படி விஷயம்.. HCL எடுத்த 'அந்த' ஒரு முடிவு..!

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக ஐடி சேவை துறை பெரிய அளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, முன்பெல்லாம் கோடி கணக்கில் கொட்டிக்கொடுத்து செய்யப்படும் திட்டங்களுக்கு தற்போது சில லட்சங்கள் கொடுக்கவே நிறுவனங்கள் யோசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் புதிய திட்டங்களை குறிப்பாக பெரிய திட்டங்களை கைப்பற்றுவது என்பது பகல் கனவாக இருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் வர்த்தகம், வருவாயை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்க மாற்று திட்டங்களையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்த துவங்கியுள்ளது.

இந்திய ஐடி துறையில் முதல்முறையாக இப்படி விஷயம்.. HCL எடுத்த 'அந்த' ஒரு முடிவு..!

அந்த வகையில் சமீபத்தில் டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் தனது ஐடி சேவையை தாண்டி இந்தியாவில் உருவாக்கியிருக்கும் ஏஐ டேட்டா சென்டருக்கான தேவையை பணமாக்கும் முயற்சியில் புதிய கூட்டணியில் டேட்டா சென்டர் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதன் நீட்சியாக ரோஷினி நாடார் மற்றும் சி.விஜயகுமார் தலைமையிலான ஹெச்சிஎல் நிறுவனம் இந்திய ஐடி சேவை துறையில் முதல் நிறுவனமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஐடி சேவை அளிக்கும் வகையிலும், இவர்களை முக்கிய வாடிக்கையாளராக மாற்றும் நோக்கிலும் தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது.

Also Read

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் பார்சூன் 500 நிறுவனங்களை தான் முக்கிய டார்கெட் ஆக வைத்து சேவை அளிக்கும், ஆனால் ஹெச்சிஎல் சற்று மாறுப்பட்டு அதிக வாடிக்கையாளர்கள், கூடுதல் வருமானம் என்ற நோக்கில் சிறு நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் நோக்கில் Neo.AI என்ற தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது.

இந்த பிரிவு இனி சிறிய மற்றும் நடுத்த நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஏஐ பிளாட்பார்ம் மற்றும் ஐடி சேவைகளை பயன்படுத்தி சாப்ட்வேர் உருவாக்குவது, சாப்ட்வேர் நிர்வாகம், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற சேவைகளை அளிக்க உள்ளது.

இப்பிரிவில் அதிக வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டால், அதிக ஐடி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய முடியும், இதேபோல் இந்த நிறுவனங்களுக்கு ஏஐ வாயிலாக சேவை அளிக்கப்பட உள்ளதால் வேகமாகவும் ப்ராஜெக்ட்-ஐ முடிக்க முடியும்.

Recommended For You

இத்தகைய வர்த்தக மாடலை ஏற்கனவே அக்சென்சர் நடைமுறையில் வைத்திருக்கும் நிலையில், ஹெச்சிஎல் இதை காப்பி அடித்துள்ளது, இதை தொடர்ந்து இந்தியாவின் மற்ற ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா, எல்டிஐ மைண்ட்ட்ரீ ஆகிய நிறுவனமும் பாலோ செய்யலாம்.

ஹெச்சிஎல் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி மற்ற 5 நிறுவனங்களை காட்டிலும் அதிக வருவாய் வளர்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் இந்த முயற்சியால் இந்தியாவில் இருக்கும் பிற சிறு, குறு ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக Coforge, Persistent Systems, Mphasis போன்ற நிறுவனங்கல் பார்சூன் 500 நிறுவனங்களை டார்கெட் செய்யாமல் சிறிய நிறுவனங்களுக்கு தான் அதிகளவில் சேவை அளித்து வருகிறது, தற்போது பெரிய நிறுவனங்களும் இதற்கு வந்தால் வர்த்தக சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படும். இதன் மூலம் ஐடி சேவை துறையில் புதிய consolidation phase உருவாகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+