இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அடுத்தடுத்து பல புதிய துறைக்குள் நுழைந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் பல தரப்பினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுவரையில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை முதலீட்டாளர்களைக் கவராத நிலையில் இன்று ஹெச்சில் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மார்ச் காலாண்டில் மொத்த லாபமாக 4307 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும். இதேபோல் இக்காலாண்டில் ஹெச்சிஎல் சுமார் 30,246 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் பெற்ற 30,246 கோடி ரூபாய் தொகையை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.

டிசிஎஸ், இன்போசிஸ் போலவே ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ம் தனது பங்கு முதலீட்டாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள 2025ஆம் நிதியாண்டில் இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 18 ரூபாய் அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகை பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியாக ஏப்ரல் 28ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி முடிவில் யாரெல்லாம் ஹெச்சிஎல் பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மே 6ஆம் தேதி ஈவுத்தொகை கிரெடிட் செய்யப்படும் என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் டெக் வருடாந்திர அடிப்படையில் லாபம் மற்றும் வருவாய் அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், காலாண்டு அடிப்படையில் லாபத்தில் 6 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது, ஆனால் வருவாயில் 1 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. சேவை பிரிவின் வருவாய் காலாண்டு அடிப்படையில் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
இக்காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் பெற்ற மொத்த ஒப்பந்த மதிப்பு 3 பில்லியன் டாலராகும். இந்நிறுவனத்தின் ஏஐ சேவை, ஜிடிஎம் சேவைகளின் அறிமுகம் புதிய ஆர்டர்கள் குவிய முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது ஜிசிசி நிறுவனங்களுக்கு 360 டிகிரி சேவையை அளித்து வருகிறது. ஆனால் ஹெச்சிஎல் இப்பிரிவில் சேவை அளிக்கிறதா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும் 2026ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி குறித்துக் கூறுகையில் 2-5 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கூறியுள்ளது. இது தவிரச் சேவைத் துறையின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 2-5 சதவீதம் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. EBIT அளவு மார்ச் காலாண்டில் பதிவான 17.9 சதவீதம் போலவே அடுத்த நிதியாண்டிலும் 18-19 சதவீதம் அளவிலான EBIT மார்ஜின் அளவீட்டை பதிவு செய்யும் எனத் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
2025ஆம் நிதியாண்டின் முடிவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 223,420 பேர், மார்ச் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2665 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர். மேலும் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 13 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications