இந்தியாவில் எட்டெக் அதாவது ஆன்லைன் கல்வி சேவை நிறுவனம் மிகவும் மோசமாக உள்ளது, குறிப்பாக இத்துறையில் பெரிய நிறுவனமாக இருக்கும் பைஜூஸ் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL குழுமம் ரோஷினி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதோடு, பல புதிய துறையில் இறங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக உள்ளது.

இதற்குச் சிறப்பான உதாரணம், ஐடி சேவையில் மட்டுமே இருந்த ஹெச்சிஎல் பாக்ஸ்கான் உடன் இணைந்து செமிகண்டக்டர் துறையில் இறங்கக் கூட்டணி நிறுவனத்திற்கான ஒப்பந்தம் செய்தது தான். இதன் நீட்சியாக தற்போது எட்டெக் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது ஹெச்சிஎல்.
கல்வி மென்பொருள் நிறுவனமான எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் (Ei) நிறுவனத்தில் ஹெச்சிஎல் குரூப் சுமார் ரூ.166 கோடி முதலீடு செய்துள்ளது. இது, இரண்டாம் நிலை பங்கு விற்பனை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், அதாவது நேரடியாக எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் (Ei) நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்காமல், மும்பையைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கஜா கேப்பிட்டல் நிறுவனம் வைத்திருந்த பங்குகளின் ஒரு பகுதியை HCL குழு கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து HCL குழுமத்தின் இயக்குனர் ஷிகார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், இந்த நிறுவனம் விரிவாக்கம் செய்யக்கூடிய வகையில் இருக்கும் தொழில்நுட்பம், சமூக நலத் திட்ட முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனம், தென்னாப்பிரிக்கா, கென்யா, கானா மற்றும் சவுதி அரேபியா போன்ற புதிய சந்தைகளுக்கு விரிவடையத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இயங்கி வருகிறது.
இதேபோல் எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனம் அதன் சேவைகளை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில், கல்வி மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் எட்டெக் ப்ராடெக்ட் நிறுவனங்களைக் கையகப்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனத்தின் சேவைகளுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான கட்டணம் செலுத்தும் பயனர்கள் இருப்பதாகக் கூறுகிறது. 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எஜுகேஷனல் இனிஷியேடிவ்ஸ் நிறுவனம், வணிகம்-டு-வணிகம் (B2B) மாதிரியில் இயங்குகிறது.
More From GoodReturns

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications