ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்திய பில்லியனர் தொழிலதிபர் மற்றும் HCL டெக்னாலஜிஸ் தலைவர் ஆவார். இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஐடி நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண் ரோஷினி நாடார் ஆவார். ஹெச்சிஎல் நிறுவனர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் தான் ரோஷினி நாடார்.
ஷிவ் நாடார் தமிழர் என்றாலும், வர்த்தகம், குடும்பம் டெல்லியில் இருந்த காரணத்தால் அவரின் ஒரே மகளான ரோஷினி நாடார் டெல்லியில் தான் அதிகளவில் வளர்ந்தார். இவர் வசந்த் வேலி பள்ளியில் படித்து, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் ரேடியோ / டிவி / திரைப்படத்தில் கவனம் செலுத்தி கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து ஹெச்சிஎல் வர்த்தகத்தை கையில் எடுக்க கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

எச்.சி.எல் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் தயாரிப்பாளராகப் பணியாற்றினார் ரோஷினி நாடார். இதை தொடர்ந்து HCL நிறுவனத்தில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள், HCL கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும் CEO ஆக பதவி உயர்வு பெற்றார். ரோஷினி நாடார் வர்த்தகத்திலும், நிர்வாகத்திலும் கைதேர்ந்த நிலையில் அவரது தந்தை ஷிவ் நாடார் பதவி விலகிய பிறகு, HCL டெக்னாலஜிஸின் தலைவராக உயர்ந்தார் ரோஷினி நாடார்.
ரோஷினி நாடார் தனது தந்தை உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார், 2023 ஆம் ஆண்டில் டாப் இந்திய ஐடி சேவை நிறுனங்களில் குறைந்த அளவிலான சரிவை மட்டுமே சந்தித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த நிலைக்கு காரணமானவர் ரோஷினி நாடார், இவருடைய கணவர் யார்..?
HCL ஹெல்த்கேர் நிறுவனத்தின் CEO மற்றும் துணைத் தலைவரின் பெயர் ஷிகர் மல்ஹோத்ரா, இவர் தான் ரோஷினி நாடார் அவர்களின் கணவர் ஆவார். ஷிகர் மல்ஹோத்ரா HCL இன் நிறுவனங்களை இயக்கும் ஹோல்டிங் நிறுவனமான HCL கார்ப்பரேஷனின் இயக்குநராகவும், HCLTech நிர்வாக குழுவில் இயக்குநராகவும் உள்ளார். இதோடு ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும், சிவ நாடார் பள்ளியின் தலைவராகவும் ஷிகர் மல்ஹோத்ரா உள்ளார்.
ஷிகர் மல்ஹோத்ரா-வின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார், ஷிகர் மல்ஹோத்ரா நீண்ட காலம் குவைத் நாட்டில் வசித்து வந்தார். அங்கு பிஸ்னஸ் அட்மினிஸ்டரேஷன் பிரிவில் உயர் கல்வியை முடித்தார் . பின்னர் , இந்தியா திரும்பிய அவர் சொந்தமாக தொழில் தொடங்கினார் .
இந்த காலக்கட்டத்தில் தான் அதாவது 2010 இல் அவர் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் என்பவரை மணந்தார். தொழில்முனைவோர் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஹெச்சிஎல் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்புகளில் சிறந்து விளங்கி வருகிறார்.

வனவிலங்கு மற்றும் அதன் பாதுகாப்பில் அதிகம் ஈடுபாடு கொண்ட ஷிகர், 2018 ஆம் ஆண்டு தனது மனைவி ரோஷினி நாடார் உடன் இணைந்து தி ஹேபிடேட்ஸ் அறக்கட்டளையை நிறுவினார். ஷிகர் மல்ஹோத்ரா மற்றும் ரோஷ்னி நாடார்-க்கு ஜஹான் மல்ஹோத்ரா மற்றும் அர்மான் மல்ஹோத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications