இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனம், ரோஷினி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் தனது தந்தையின் கனவு திட்டத்தையும், ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிறுவனத்தை உருவாக்கியதற்கான அடிப்படை நோக்கத்தையும் பூர்த்தி செய்ய புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிர்வாகத்தை ரோஷினி நாடார் கையில் கொடுக்கும் போது ஹெச்சிஎல் சாம்ராஜ்ஜியத்தின் நிலை என்னாகும் என பல கேள்விகள் இருந்தாலும், அனைத்து கேள்விகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளது அவருடைய டீம். இந்த நிலையில் ரோஷினி நாடார் தலைமையில் ஹெச்சிஎல் டெக் மென்பொருள் சேவை துறையில் மட்டும் இல்லாமல் வன்பொருள் துறையிலும் இறக்க முடிவு செய்துள்ளார்.

ஹெச்சிஎல் குரூப் கர்நாடகா மாநிலத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் OSAT தொழிற்சாலையை கட்டமைக்க முடிவு செய்துள்ளது, இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாக கர்நாடகா அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஹெச்சிஎல் நிர்வாகம்.
கர்நாடகா மாநிலத்தில் ஹெச்சிஎல் குரூப் அமைக்கும் இந்த சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளம் (OSAT) சிறிய அல்லது நடுத்தர அளவில் தான் இருக்க போகிறது, இதற்காக சுமார் 400 மில்லியன் டாலர் அளவுக்கு ரோஷினி நாடார் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹெச்சிஎல் குரூப் அமைக்கும் இந்த சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்திற்கு கர்நாடகா அரசு பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகிலும், மைசூரிலும் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் இதை இன்னும் ஹெச்சிஎல் டெக் உறுதி செய்யவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மைசூர் தான் சிலிக்கான் ஃபேப் உற்பத்திக்கும், OSAT தயாரிப்பிற்கும் ஏற்ற இடமாக கர்நாடக மாநிலம் கருதுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இப்பகுதியில் தான் போதுமான தண்ணீர் வசதிகள் கிடைக்கிறது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் HCL குழுமத்திற்கான பல்வேறு ஊக்க திட்டத்தையும் கர்நாடக மாநில அரசு உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications