இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்துள்ள ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சில காலாண்டுக்கு முன்பு விப்ரோவின் இந்த இடத்தை பிடித்தது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 3,674 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை 2,25,944 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டில் வெறும் 2,945 ஊழியர்களை மட்டுமே கூடுதலாக சேர்த்த ஹெச்சிஎல் டெக் மார்ச் காலாண்டில் 3,674 ஊழியர்களை சேர்த்துள்ளது ஆரோக்கியமான விஷயமாக உள்ளது.

ஆனால் 2023 ஆம் ஆண்டு முழுவதும் கணக்கிட்டால், ஹெச்சிஎல் நிறுவனம் சுமார் 60 சதவீத ஊழியர்களை குறைவாக சேர்த்துள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் 39,900 ஊழியர்களில் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் 57% குறைந்து 17,067 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது.
மேலும் டிசம்பர் காலாண்டில் பதிவான 21.7% அட்ரிஷன் விகிதத்தை ஒப்பிடுகையில் மார்ச் காலாண்டில் 19.5 சதவீதமாக குறைந்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் 30000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க திட்டமிட்ட நிலையில் 26,734 பிரஷ்ஷர்களை மட்டுமே சேர்த்தது.
மார்ச் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 6,14,795 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் எப்போதும் இல்லாத வகையில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 2,197 குறைந்தது. ஆனால் மார்ச் காலாண்டில் முந்தைய எண்ணிக்கையை காட்டிலும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 821 அதிகரித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் படி, இதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,43,234 ஆக உள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 3,46,845 ஆகவும், மார்ச் 2022 காலாண்டு முடிவில் 3,14,015 ஆகவும் இருந்தது.

மார்ச் 31, 2023 காலாண்டு முடிவில் இன்போசிஸ் சாப்ட்வேர் ஊழியர்கள் எண்ணிக்கை 3,24,816 ஆக உள்ளது, இது டிசம்பர் காலாண்டில் 3,29,296 ஆகவும், மார்ச் 2022 காலாண்டு முடிவில் 2,97,859 ஆக உள்ளது. டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் சாப்ட்வேர் ஊழியர்கள் எண்ணிக்கை 4,480 ஆக குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications