நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜி அதன் ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி அதன் நிகர லாபம் 3,593 கோடி ரூபாயாக லாபம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 226% அதிகரித்துள்ளது.
இதன் வருவாய் விகிதமானது 15% அதிகரித்து, 22,597 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருவாய் எதிர்பார்ப்பு
டாலர் அடிப்படையில் இதன் வருவாய் 2993 மில்லியன் டாலர்களாக இருந்தது. 2022 - 23 நிதியாண்டில் ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 18 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் நிகர லாபம் 1102 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த டிசம்பர் காலாண்டில் 3442 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 - 2022ம் ஆண்டில் லாபம்
ஏப்ரல் - மார்ச் வரையிலான நிதியாண்டில் லாபம் 21.1% அதிகரித்து, 13,499 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 11,145 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது 85,651 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 13.6% அதிகரித்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 75,379 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணியமர்த்தல்
2022ம் நிதியாண்டில் நிறுவனம் 40,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது. இதன் மொத்த ஊழியர்கள் விகிதமானது 2,08,877 பேராக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் மட்டும் 11,100 ப்றை சேர்த்துள்ளது. இது முந்தைய காலாண்டினை காட்டிலும் 5.6% அதிகமாகும். இதே அட் ரிஷன் விகிதமானது மார்ச் காலாண்டில் 21.9% ஆக அதிகரித்துள்ளது.
மொத்த ஒப்பந்த மதிப்பு
நிறுவனத்தின் மொத்த புதிய ஒப்பந்த மதிப்பானது 2260 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. நிலையான நாணய அடிப்படையில் 4வது காலாண்டில் வளர்ச்சி விகிதமானது 13% மேலாக அதிகரித்துள்ளது. இதே துறை வாரியாலக பார்க்கும்போது சேவை வணிகத்தில் 17% வளார்ச்சியும், இன்ஜினியியரிங் மற்றும் r&d சேவையில் 24% வளர்ச்சியும் நிலையான நாணய விகிதத்தில் கண்டுள்ளது.
இன்றைய பங்கு விலை
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது முடிவில் 0.90% அதிகரித்து, 1099.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 1105.05 ரூபாயாகும்.இதன் குறைந்தபட்ச விலை 1081.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1377.75 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 891 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது முடிவில் 0.92% அதிகரித்து, 1099.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 1105 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 1081.30 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1377 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 891.25 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications