சென்னை: இந்திய ஐடி சேவை துறையின் மாபெரும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. இக்காலாண்டில் சந்தை கணிப்புகளைத் தாண்டி ஏப்ரல்-ஜூன் ரூ.12,040 கோடி அளவிலான லாபத்தைப் பதிவு செய்து 9% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை ரோஷினி நாடார் தலைமையில் ஹெல்சிஎல் டெக் நிறுவனம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,257 கோடி அளவிலான லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் HCL Tech நிறுவனத்தின் நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,534 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 7% அதிகரித்து ரூ.28,057 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு சுமார் ரூ.12 இடைக்கால ஈவுத்தொகைாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான பதிவு நாள் ஜூலை 23 ஆகவும், பணம் செலுத்தும் தேதி ஆகஸ்ட் 1 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளளையில் 2024 மார்ச் காலாண்டை ஒப்பிடும் போது ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 7% அதிகரித்துள்ளது. ஆனால் வருவாய் 1.5% குறைந்துள்ளது, இது ஹெச்சிஎல் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஓன்றாகும்.
ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் லாபத்திற்கு முந்தைய வட்டி, வரி மற்றும் தேய்மானம் (EBIT) ரூ.4,795 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 7% அதிகரித்துள்ளது. ஆனால் மார்ச் 2024 காலாண்டை ஒப்பிடும் போது 4% குறைந்துள்ளது.
ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் சுமார் 1.96 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications