இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜூன் காலாண்டில் 7.6 சதவீத உயர்வுடன் சுமார் 3,534 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது. இதே காலக்கட்டத்தில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் உயர்ந்து 26,296 கோடி ரூபாயாக உள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் புதன்கிழமை மாலையில் தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், வியாழக்கிழமை பங்குசந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், இந்நிறுவனம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் சேவை அளிக்கும் ASAP Group-ஐ மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது வர்த்தகத்தையும் சேவைகளை விரிவாக்கம் செய்ய தீவிரமாக இருக்கும் வேளையில் வேகமாக மாறி வரும் ஆட்டோமொபைல் துறையில் ஆளில்லா டிரைவிங், ஈ-மொபிலிட்டி, கனெக்டிவிட்டி தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் ASAP Group-ஐ மொத்தமாக கைப்பற்றியுள்ளது.
ASAP Group-ன் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சுமார் 251 மில்லியன் யூரோ கொடுத்து இந்நிறுவனத்தை வாங்குகிறது. இந்த நிலையில் பங்குகள், நிர்வாகம், வர்த்தகம் ஆகியவை செப்டம்பர் 2023-க்குள் மாற்றப்படும் என வியாழக்கிழமை பங்குசந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் ஹெச்சிஎல் ஜெர்மனியில் தனது வர்த்தக கவனத்தை அதிகரித்துள்ளது, இந்நிறுவனத்திற்கு 3வது பெரிய சந்தையாக ஜெர்மனி இருக்கும் வேளையில் இந்த 251 மில்லியன் யூரோ மூதலீடு வாயிலாக ஹெச்சிஎல் இன்ஜினியரிங் பிரிவு வலிமை அடைவது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகத்தையும் பெற உள்ளது என engineering and R&D services பிரிவின் தலைவர் ஹிரி சதர்ஹல்லி தெரிவித்தார்.
ASAP Group ஜெர்மனியை தலைமையாக கொண்டு ஐரோப்பா முழுவதிலும் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் எலக்ட்ரிக் / எல்க்ட்ரானிக்ஸ், சாப்ட்வேர், கன்சல்டிங் மற்றும் சர்வீசஸ், டெஸ்டிங், வெஹிக்கல் டெவலப்மென்ட் என 5 பிரிவுகளில் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications