ஹெச்சிஎல் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சி விஜயகுமார் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்ட போது ஹெச்சிஎல் நிறுவனத்தின் Hiring திட்டம் குறித்துப் பேசினார்.
இந்தியாவில் அனைத்து முன்னணி டெக் சேவை நிறுவனங்களும் டிசம்பர் காலாண்டில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்த நிலையில் ஐடி துறை ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சி விஜயகுமார் ஹெச்சிஎல் நிறுவனத்தின் Hiring திட்டம் குறித்துப் பேசியது புதிய நம்பிக்கை அளித்துள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம்
ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் டேலென்ட் காஸ்ட் அளவும் அதிகமான அளவில் இருந்து மிதமான அளவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18 மாதத்தில் புதிய டெக் ஊழியர்கள் நியமனத்தின் அளவு 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
30000 ஊழியர்கள்
மேலும் கடந்த 12 மாதத்தில் பிரஷ்ஷர் மற்றும் அனுபவம் பெற்ற அதிகாரிகள் என நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும், பிரிவிலும் சுமார் 30000 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளோம். இதேபோல் அடுத்தாக 12 மாதத்தில் 30000 ஊழியர்களைச் சேர்க்க உள்ளோம் எனச் சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த 30000 ஊழியர்களில் பெரும் பகுதி பிரஷ்ஷர்கள் நியமிக்கப்பட ஆதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
டிஜிட்டல் சேவை
இந்தியாவில் அனைத்து முன்னணி டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்களும் டிஜிட்டல் சேவை மீது அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில் ஹெச்சிஎல் சிஇஓ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் டிஜிட்டல் சேவை பிரிவின் வளர்ச்சியின் மீது அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில், செயற்கை நுண்ணறிவு பிரிவு வளர்ச்சிக்கான கவனம் உயரும்.
கூடுதல் கவனம்
மேலும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ல் டிஜிட்டல் சேவை பிரிவு தனியாக இல்லாமல் ஒருங்கிணைந்து இருக்கும் காரணத்தால் கூடுதல் கவனத்தைப் பெறும் ஹெச்சிஎல் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறி
இன்றைய வர்த்தக உலகில் ஆன்லைன் ஷாப்பிங் முதல் பயணம் வரை அனைத்து டிஜிட்டல் சேலை தளத்திலும் செயற்கை நுண்ணறி செயல்பாடுகளால் நம்முடைய வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தொடர்ந்து அதிகரிக்கத் தான் போகிறது.
AI துறை
இந்த நிலையில் ஹெச்சிஎல் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சி விஜயகுமார் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்ட போது ஒரு பேட்டியில் AI துறை பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் பேசியுள்ளார்.
10 டிரில்லியன் டாலர் சந்தை
இன்றைய டிஜிட்டல் வர்த்தக உலகில் AI வாய்ப்புகள் நிறைந்துள்ளது கண்முன்னே தெரிகிறது. இதனால் செயற்கை நுண்ணறிவு மீது அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு பிரிவில் மட்டும் நிலையான தீர்வுகள் மற்றும் சேவைகளுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் எனக் கணித்துள்ளார் சி விஜயகுமார். இதனால் மிகப்பெரிய வர்த்தகப் பிரிவாக மாறும் இந்த வாய்ப்புகளை ஹெச்சிஎல் கைவிடாது.


Click it and Unblock the Notifications