இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-ன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான சி.விஜயகுமார் 2023 ஆம் நிதியாண்டுக்கு பெற்ற சம்பளத்தின் அளவுகள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே ஐடி சேவை நிறுவனங்கள் சிஇஓ மத்தியில் யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற போட்டியிருக்கும்...
கடந்த சில வருடங்களாக விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்டே மற்றும் இன்போசில் சிஇஓ சலில் பாரிக் மத்தியில் பெரும் போட்டியிருக்கும். இந்த முறையும் இதே போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்த கதையும் மாறியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க மறுபுறத்தில் ஹெச்சிஎல் டெக் சிஇஓ சி.விஜயகுமார் சம்பளம் 80 சதவீதம் குறைந்துள்ளஐது.

இந்தியாவில் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் 2023 ஆம் நிதியாண்டுக்கு வெறும் 28.4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இது அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிட்டால் 3.46 மில்லியன் டாலர், இதில் அடிப்படை சம்பளமாக 2 மில்லியன் டாலரும், செயல்திறன் அடிப்படையில் 1.43 மில்லியன் டாலரும், கொடுப்பனவு மற்றும் இதர சலுகைகள் மூலம் 0.03 மில்லியன் டாலர் வரையிலான தொகையை சம்பளமாக பெற்றுள்ளார்.
கடந்த வருடம் ஹெச்சிஎல் டெக் சிஇஓ சி.விஜயகுமார் 16.5 மில்லியன் டாலர் அதாவது 130 கோடி ரூபாயை சம்பளமாக பெற்ற நிலையில் இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் ஐடி சேவை நிறுவன சிஇஓ-வாக இருந்தார். ஆனால் இப்போது வெறும் 28.4 கோடி ரூபாய் சம்பளத்துடன் இந்த வருடத்தின் மிகவும் குறைவான சம்பளம் வாங்கும் ஐடி சேவை நிறுவன சிஇஓ-வாக உள்ளார்.

இந்த 80 சதவீத சரிவுக்கு முக்கிய காரணம் LTI எனப்படும் Long Term Incentives தான். LTI என்பது 2 வருடத்திற்கு ஒரு முறை அளிக்கப்படும் வேளையில் இந்த வருடம் கொடுக்கப்படாத காரணத்தால் 80 சதவீத சரிவு பதிவாகியுள்ளது. ஆனாலும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மீடியன் சம்பளத்தை காட்டிலும் சி.விஜயகுமாரின் சம்பளம் 253.35 மடங்கு அதிகம்.
மேலும் 2023 ஆம் நிதியாண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஐடி சிஇஓ-க்கள் பட்டியலில் விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்டே-வின் சம்பளம் 82 கோடி ரூபாய் உடன் முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் 56.4 கோடி ரூபாய் உடன் இன்போசிஸ் சிலில் பாரிக், 3வது இடத்தில் 30.1 கோடி ரூபாய் உடன் டெக் மஹிந்திரா சிஇஓ சிபி.குர்நானி, 4வது இடத்தில் 29.16 கோடி ரூபாய் உடன் டிசிஎஸ் முன்னாள் டிஇஓ ராஜேஷ் கோபிநாத், 5வது இடத்தில் 28.4 கோடி ரூபாய் உடன் ஹெச்சிஎல் டெக் சிஇஓ சி.விஜயகுமார் உள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications