ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் எம்.டி.யான சி. விஜயகுமார், தமிழ்நாடு ரூ.1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய அடிப்படை கூறுகள் அனைத்தையும் கொண்டுள்ளது என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிற மாநிலங்களை போல் அல்லாமல் உற்பத்தி முதல் சேவைகள் வரை பல்வேறு துறைகளில் வர்த்தக கட்டமைப்புகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் திறனை கொண்டும், பெரும் பொருளாதாராம் ஈட்டும் திறன் உள்ளடக்கிய மாநிலமாக பன்முக கட்டமைப்பை கொண்டு உள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஐடி, தொழில்நுட்பம், நிதி, வேளாண்மை மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புகள் உள்ளிட்ட இந்த பன்முக பொருளாதார கட்டமைப்பு, மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
இதேபோல் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே பொருளாதாரத்தை உருவாக்கும் எபிசென்டராக இல்லாமல், மாநிலம் முழுவதும் பல நகரங்கள் நன்கு வளர்ந்த கட்டமைப்பு மற்றும் சிறப்பான வணிக சூழலைக் கொண்டுள்ளன, இது சமமான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி பாதையை ஊக்குவிக்கிறது.
இதேவேளையில் ரூ.1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய சில முக்கியமான பொருளாதாரம் மற்றும் வர்த்தக கொள்கையில் மாற்றம் தேவை என்றும் விஜயகுமார் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் $10,000 முதல் $15,000 வரை இருக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இது மிடில் இன்கம் நாடுகளின் நிலை தான் என்றும் கூறியுள்ளார்.
தனிநபர் வருமானத்தில் அதிகரிக்கும் போதும், மாநிலம் அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும். தற்போது தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் $4,000 அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தனிநபர் வருமானத்தை அதிகரிக்க தமிழ்நாட்டில் குறைந்த திறன் கொண்ட வேலைகளிலிருந்து உயர் மதிப்பு, உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மூலம் இந்த $10,000 - $15,000 வருமான இலக்கை எளிதாக எட்ட முடியும்.
அதிக திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கும் உயர் உற்பத்தித்திறன் கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம், தமிழகம் தனது முழு பொருளாதார திறனை வெளிப்படுத்தி, ரூ.1 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் இலக்கை வேகமாக அடைய முடியும்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications