சென்னை: இந்திய ஐடி சேவைத் துறையில் உயர் அதிகாரிகள் வெளியேறுவது பெரும் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாகப் பெரிய அதிகாரிகள் யாரும் வெளியேறாமல் நிலைமை சீராக இருந்தது. ஆனால் தற்போது அதிரடியாக ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருந்த பிரதீக் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதீக் அகர்வால் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஎப்ஓ-வாக 2018 ஆம் ஆண்டு முதல் இப்பதவியிலிருந்து வரும் இவர், தற்போது நிறுவனத்திற்கு வெளியே புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஹெச்சிஎல் டெக் பங்குகள் 0.01 சதவீதம் மட்டுமே உயர்ந்து 1678.40 ரூபாயாக உள்ளது.

இந்த செய்தி ஹெச்சிஎல் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முன்பு விப்ரோ நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தில் இது நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் பதவியில் பிரதீக் அகர்வால்-க்கு பதிலாக சிவ் வாலியா (Shiv Walia) நியமிக்கப்பட்டு, அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் புதிய தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார். பிரதீக் அகர்வால் வரும் செப்டம்பர் 6 வரை ஹெச்சிஎல் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1993-ம் ஆண்டு முதல் ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரதீக் அகர்வால், கடந்த சில வருடங்களாக நிதித்துறையின் பல மேலாண்மைப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், உலகளாவிய நிதி திட்டமிடல் மற்றும் வணிக நிதி நடவடிக்கைகளின் தலைவராகவும் உள்ளார்.
மேலும் புதிய CFO குறித்து ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டி சி. விஜயகுமார் கூறுகையில் "சிவ் வாலியா கடந்த பல ஆண்டுகளாக நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அனுபவமிக்க நிதித் துறைத் தலைவரான அவர், பல நாடுகளிலும் மற்றும் வணிகங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்தும் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
"கடந்த 12 ஆண்டுகளாக ஹெச்சிஎல் டெக் நிறுவனத்திற்கு அளித்த பங்களிப்புகளுக்கு பிரதீக் அகர்வாலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றும் விஜயகுமார் கூறியுள்ளார்.
சிவ் வாலியா டெல்லி எஸ்ஆர்சிசி கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றவர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சார்ட்டட் அக்கவுண்டன்ட் மற்றும் சான்று பெற்ற கணக்காளராக உள்ளார். 1998 ஏப்ரல் முதல் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
1993 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை ஹெச்சிஎல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2024 ஏப்ரல் மாதம் முதல் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் நிதித்துறை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய ஜதின் தலால் கடந்த ஆண்டு விப்ரோவை விட்டுவிட்டு காக்னிசண்ட் நிறுவனத்தின் சிஎப்ஓவாக சேர்ந்தார். விப்ரோ நிறுவனத்தின் சிஎப்ஓவாக அபர்ணா ஐயர் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த சுபா தத்தவார்த்தி நிறுவனத்திற்கு வெளியே வாய்ப்புகளைத் தேடி பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications