இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் எப்போது கடுமையான போட்டி இருக்கும், ஆனால் கடந்த ஒரு வருடமாக எப்படியாவது இருக்கும் வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொண்டு புதிய வர்த்தகத்தைக் குறைவான லாபத்தில் பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பது என்பது யாராக இருந்தாலும் கடினமான விஷயம் தான். ஆனால் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ்-க்கு பின்பு ஹெச்சிஎல் மட்டுமே பிரஷ்ஷர்களை இந்த ஆண்டு பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் 3வது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான HCL டெக், 2025ஆம் நிதியாண்டில் 10,000க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணிக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார மற்றும் வர்த்தக சூழல்நிலையில் பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பதை விப்ரோ, இன்போசிஸ் பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ் கேம்பஸ் இண்டர்வியூவ்-ஐ மொத்தமாக புறக்கணித்துள்ளது. இந்த HCL டெக் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
HCL நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் கூட்டத்தில் பேசிய தலைமை மனிதவள மேலாண்மை அதிகாரி ராமச்சந்திரன் சுந்தரராஜன் அவர்கள், "2025ஆம் நிதிய ஆண்டில் 10,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணிக்கு சேர்க்க வேண்டும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
கடந்த காலாண்டில் நாங்கள் நடத்திய கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் எங்கள் இலக்கில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை தேர்வு செய்துள்ளோம். இந்த காலாண்டில் மேலும் 15% பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்கியுள்ளோம். அடுத்த சுற்று பணிவாய்ப்பு நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
HCL டெக் நிறுவனம் கடந்த காலாண்டுகளில் தொடர்ந்து பணியாளர்களை சேர்த்து வருகிறது. மார்ச் 31ஆம் தேதி முடிந்த காலாண்டில் 2,725 பணியாளர்களை புதிதாக பணிக்கு சேர்த்துள்ளது.
கடந்த நிதிய ஆண்டில் (FY24) மொத்தம் 12,141 புதிய பட்டதாரிகளை பணிக்கு சேர்த்துள்ளது. கடந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 227,481 ஆகும். கடந்த நிதிய ஆண்டில் (FY24) ஒப்பீட்டில் 1,537 பணியாளர்கள் அதிகரித்துள்ளனர்.
டாடாட கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 2025ஆம் நிதிய ஆண்டில் சுமார் 40,000 புதிய பட்டதாரிகளை பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications