இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ள ஹெச்சிஎல் நிறுவனம், இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இன்போசிஸ் உடன் போட்டிப்போட்டு வரும் ஹெச்சிஎல் கடந்த சில ஆண்டுகளாக ரோஷினி நாடார் தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் மொத்த லாபத்தில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து 3,832 கோடி ரூபாய் தொகையை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் 3,489 கோடி ரூபாய் அளவிலான தொகையை லாபமாக பெற்று இருந்தது.

இதே காலக்கட்டத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 8 சதவீத வளர்ச்சியில் 26,672 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் 24,686 கோடி ரூபாய் அளவிலான தொகையை வருவாயாக பெற்று இருந்தது.
டிசிஎஸ் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீத வளர்ச்சியில் 11,342 கோடி ரூபாய் லாபத்தையும், இன்போசிஸ் நிறுவனம் 3 சதவீத வருடாந்திர உயர்வுடன் 6212 கோடி ரூபாய் லாபத்தை பெற்று இருந்தது. லாப வளர்ச்சி அளவீட்டில் பார்த்தால் ஹெச்சிஎல் தான் டாப்பு.
இதேவேளையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு சுமார் 12 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை கொடுத்துள்ளனர். ஈவுத்தொகைக்கான ரெக்கார்ட் தேதியாக அக்டோபர் 20 ஆம் தேதியும், பேமெண்ட் தேதியை அக்டோபர் 31 ஆம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது.
நிலையான நாணய மதிப்பீட்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் காலாண்டு அடிப்படையில் 1 சதவீத வருவாய் வளர்ச்சி மட்டுமே எட்டியுள்ளது. இதுவே வருடாந்திர அடிப்படையில் 3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் EBIT அளவீடு 4934 கோடி ரூபாயாக 2வது காலாண்டில் உயர்ந்துள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 16 பெரிய திட்டங்களை பெற்றுள்ளது. புதிதாக பெற்ற மொத்த திட்டங்களின் மதிப்பு 3.9 பில்லியன் டாலர். மேலும் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் வருவாய் வளர்ச்சி அளவீட்டில் 4-5 சதவீதம் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் ஹெச்சிஎல் டெக் பங்குகள் 1.78 சதவீதம் சரிந்து 1,223.40 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications