இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் இன்று தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், அதன் நிகர லாபம் 10.5% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் ரூ.3,832 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இம்முறை ரூ.4,235 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் 8.2% அதிகரித்து ரூ.28,862 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.26,672 கோடி மட்டுமே வருவாயாகப் பதிவு செய்யப்பட்டது . வருவாய் மற்றும் லாபம் இரண்டும் சந்தை எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் காரணத்தால் நாளை ஹெச்சிஎல் பங்குகள் அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிர்வாகம் செப்டம்பர் காலாண்டு முடிவில் பங்குதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரூ.12 இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இந்த இடைக்கால ஈவுத்தொகையைச் செலுத்தும் தேதி அக்டோபர் 30 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி கணிப்பையும் வெளியிட்டு உள்ளது, இதில் நிலையான நாணய விதிமுறைகளில் வருடாந்திர அடிப்படையில் 3.5% முதல் 5.0% வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கிறது.
மேலும் செப்டம்பர் காலாண்டு முடிவில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,18,621 ஆக உள்ளது. இக்காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 780 பேர் குறைந்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் 2,932 புதிதாக சேர்த்ததுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதிகரித்துள்ளது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் செப்டம்பர் காலாண்டில் 14.2% இல் இருந்து 12.9% ஆக குறைந்துள்ளது. இது மிகவும் முக்கியமான மாற்றமாகவும், முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் இக்காலாண்டில் புதிதாகப் பெற்ற மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பு 2.218 பில்லியன் டாலராகும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications