சந்தை மதிப்பீட்டளவில் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் HCL டெக்னாலஜிஸ் டிசம்பர் 2025 காலாண்டு முடிவுகளை டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து வெளியிட்டது. டிசிஎஸ் நிறுவனத்தை போலவே ஹெச்சிஎல் நிறுவனம் லாபத்தில் சரிவை பதிவு செய்துள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,591 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு 11 சதவீதம் குறைந்து ரூ.4,076 கோடியாக உள்ளது. டிசிஎஸ் கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் ரூ.12,380 கோடி அளவிலான நிகர லாபத்தை பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு 14 சதவீதம் குறைந்து ரூ.10,657 கோடியாக மட்டுமே பதிவு செய்துள்ளது.

வருவாய் வளர்ச்சி
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் லாபம் குறைந்தாலும், வருவாய் வளர்ச்சி நிலையாக உயர்ந்த வருகிறது. டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 13 சதவீதம் உயர்ந்து ரூ.33,872 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.29,890 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது செப்டம்பர் காலாண்டுக்கும், டிசம்பர் காலாண்டுக்கும் வருவாய் அளவு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் நிலையான நாணய அடிப்படையில் (Constant Currency) இந்நிறுவனத்தின் வருவாய் காலாண்டு அடிப்படையில் 4.2 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 4.8 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
டிவிடெண்ட் அறிவிப்பு
HCL டெக்னாலஜிஸ் டிசம்பர் காலாண்டு முடிவில் டிசிஎஸ் போல் பலே இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. ஒரு பங்கிற்கு ரூ.12 டிவிடெண்ட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகைக்கான ரெக்கார்ட் தேதியாக ஜனவரி 16, 2026 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் ஜனவரி 27, 2026 அன்று செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த டிவிடெண்ட் தொகையை பெற வேண்டுமாயின் ஜனவரி 16ஆம் தேதி வர்த்தகம் நாள் முடியும் போது, உங்கள் டீமேட் கணக்கில் டிசிஎஸ் பங்குகள் இருக்க வேண்டும்.
AI சேவைகள்
ஹெச்சிஎல் டெர்னாலஜிஸ் AI சேவை பிரிவின் கீழ் 146 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டிடுள்ளதாக தெரிவித்துள்ளது. இது காலாண்டு அடிப்படையில் 19.9 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications