HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3,983 கோடி ரூபாய் அளவிலான நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் HCL டெக்னாலஜிஸ் 3,593 கோடி ரூபாயை லாபத்தை ஒப்பிடுகையில் சுமார் 11 சதவீதம் அதிகமாகும்.
மேலும் HCL டெக்னாலஜிஸ் 2023 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதன் ஆப்ரேட்டிங் வருவாய் 18 சதவீதம் உயர்ந்து 26,606 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 22,597 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

HCL டெக்னாலஜிஸ் சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் லாபம் மற்றும் வருவாயில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் மார்ச் காலாண்டு முடிவில் டிசிஎஸ்-ஐ பீட் செய்ய முடியவில்லை என்றாலும் இன்போசிஸ்-ஐ முந்தியுள்ளது.
மேலும் HCL டெக்னாலஜிஸ் மார்ச் காலாண்டு முடிவுகளில் அதன் நிர்வாக குழு 2023-24 நிதியாண்டுக்கு ஒரு பங்கு பங்கிற்கு சுமார் 18 ரூபாய் அளவிலான இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இதேவேளையில் டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 3% சரிந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 4,096 கோடி ரூபாயாக இருந்தது.

மார்ச் காலாண்டில் சேவை பிரிவின் வருவாய் 11% அதிகரித்துள்ளது, மென்பொருள் வர்த்தகத்தின் வருவாய் 8.2% வளர்ச்சியைக் கண்டதுள்ளது, மேலும் டிஜிட்டல் வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் EBIT அளவு 4,836 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் காலாண்டில், HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் 13 பெரிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது, இந்த 13 ஒப்பந்தத்தில் சேவை பிரிவில் 10 ஒப்பந்தங்களும், மென்பொருள் துறையில் 3 ஒப்பந்தங்களும் பெற்றுள்ளது. இதன் மூலம் மார்ச் காலாண்டில் முடிவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு (TCS) ஆண்டுக்கு 8% குறைந்து 2.07 பில்லியன் டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications