16,000 ஊழியர்களுக்கு 25-30% வரை சம்பள உயர்வு.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போலத் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளித்து வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான ஊழியர்கள் தேவை இருக்கும் காரணத்தால் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் ஊழியர்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமான திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பள உயர்வு அளித்து ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. இதன் வாயிலாக ஹெச்சிஎல் டெக்னாலஜி சுமார் 16,000 ஊழியர்களுக்கு ஸ்கில் அடிப்படையிலான போன்ஸ்-ஐ வாரி வழங்கியுள்ளது.

 16,000 ஊழியர்களுக்கு ஜாக்பாட்

16,000 ஊழியர்களுக்கு ஜாக்பாட்

இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது திறன் வாய்ந்த ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அனைத்து வகையான முயற்சிகளையும், பணிகளையும் செய்யத் துவங்கியுள்ளனர். இதன் வாயிலாகவே முக்கியத் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு skill-based allowance என்ற பெயரில் ஊழியர்களின் சிறப்புமிக்கத் தொழில்நுட்ப திறனைப் பாராட்டும் விதமாக 16,000 ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் (CTC) 25 முதல் 30 சதவீத allowance ஆக அளித்துள்ளது.

 தொடர் உயர்வு

தொடர் உயர்வு

முக்கியத் தொழில்நுட்ப சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் ப்ரீமியம் தொகை செலுத்துகின்றனர், இதை நாங்கள் ஊழியர்களுக்கு அளிக்கிறோம். கடந்த சில வருடங்களாகவே இந்த skill-based allowance பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்தில்

தொழில்நுட்பத்தில்

சி. விஜயகுமார் தலைமையிலான ஹெச்சிஎல் நிறுவனம் சுமார் 25 முதல் 30 தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது தேர்ச்சி பெறச் செய்வது என ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காகப் பல பணிகளைச் செய்து வருகிறோம். இதன் வாயிலாக முக்கியமான தொழில்நுட்பத்தில் 100 ஊழியர்களைத் தேவையெனில் 55 ஊழியர்களை நிறுவனத்திற்குள்ளேயே இருக்கும் வகையில் இந்த முறை வளர்ச்சி அடைந்துள்ளது.

 கல்லூரி மாணவர்களுக்கு வேலை

கல்லூரி மாணவர்களுக்கு வேலை

மேலும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2022ஆம் நிதியாண்டில் 20,000 பட்டம் பெற்ற கல்லூரி மாணவர்கள் அதாவது பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று நிறைந்த 2021ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் சுமார் 14,500 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

 மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,68,977 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 18,554 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது ஹெச்சிஎல். மேலும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் கடந்த வருடம் 16 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 9.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+