ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் ஐடி நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஐடி சேவை துறையில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற பெரும் குழுப்பத்தில் உள்ளனர். இதேவேளையில் ஹெச்சிஎல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் இந்நிறுவன ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யலாமா என யோசிக்க துவங்கியுள்ளனர்.
ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஜூன் காலாண்டில் 7.6 சதவீத உயர்வுடன் சுமார் 3,534 கோடி ரூபாய் லாபத்தையும், வருவாயில் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் உயர்வுடன் 26,296 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவை மேம்படுத்த ஊழியர்களின் சம்பளத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஜூன் காலாண்டு முடிவில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,23,438 ஆக உள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,506 பேர் குறைந்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஐடி நிறுவனமும் காலாண்டு அடிப்படையில் அதிக ஊழியர்களை சேர்க்கும், இந்த நிலையில் ஜூன் காலாண்டில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம் உள்ளது.
கொரோனா தொற்று பின்பு இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்பை பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு 70 முதல் 120 சதவீதம் வரையில் சம்பளம் அளிக்ககொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிகப்படியான வர்த்தக பாதிப்பு காரணமாக புதிதாக பெறக்கூடிய வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் ஊழியர்களின் அதிகப்படியான சம்பள செலவுகள் மூலம் நிறுவனத்தின் மார்ஜின் குறைந்து வருகிறது.

இதை சரி செய்ய ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது ஜூனியர் மற்றும் நடுத்தர பிரிவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளிக்காமல் இருக்க முடியாது என்பதற்காகவும், வர்த்தக வளர்ச்சிக்கும் பிஸ்னஸ் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக சம்பள உயர்வை இந்த வருடம் வழங்குகிறது. ஆனால் ஒரு காலாண்டுக்கு ஒத்திவைத்து தாமதமாத வழங்குகிறது.
இதேபோல் நிர்வாக பிரிவுக்கு மேல் அதாவது இருக்கும் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கவில்லை, இதன் மூலம் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு மொத்தமாக கட் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய சந்தை நிலவரத்தில் உயர் அதிகாரிக்களுக்கான வேலைவாய்ப்பு வெளி சந்தையில் மிகவும் குறைவு என்பதை தெரிந்துக்கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள் சம்பள உயர்வை குறைத்தும், ஒத்திவைத்தும் வரும் காரணத்தால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி உடன் சோகத்திலும் மூழ்கியுள்ளனர். குறிப்பாக உயர்மட்ட அதிகாரிகள் வேலைவாய்ப்புகளை தேடும் படலத்தில் உள்ளனர், ஆனால் டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனத்திலேயே ஆன்போர்டிங் செய்ய 3-4 மாதம் தாமதமாகும் காரணத்தால் பணியை ராஜினாமா செய்ய முடியவில்லை.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications