இன்போசிஸ்-ஐ ஓரம்கட்டும் HCL.. சைலென்டாக ரூ.17400 கோடி ப்ராஜெக்டை கைப்பற்றியது..!

ஹெச்சிஎல் டெக் நிறுவனம் சர்வதேச டெலிகாம் சேவை நிறுவனமான வெரிசோன் (VERIZON) உடைய 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா ஐடி சேவை நிறுவனங்கள் புதிய வர்த்தகம் கிடைக்காமல் போராடி வரும் வேளையில் அத்திப்பூத்தாற் போல் மாதத்திற்கு ஒரேயொரு 1 பில்லியன் டாலர் திட்டத்தை கைப்பற்றி பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையை காப்பாற்றி வருகிறது.

ஆனால் ரோஷினி நாடார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உயர்மட்ட நிர்வாகம் வேகமான வளர்ச்சி பாதைக்கு வித்திட்டு தற்போது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் துறையில் வெரிசோன் நிறுவனத்தின் எண்டர்பிரைசர்ஸ் பிரிவு ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தை தனது முதன்மையான MNS எனப்படும் மேனேஜ்டு நெட்வொர்க் சர்வீசஸ் அறிவித்துள்ளது.

இன்போசிஸ்-ஐ ஓரம்கட்டும் HCL.. சைலென்டாக ரூ.17400 கோடி  ப்ராஜெக்டை கைப்பற்றியது..!

இந்த முக்கியமான திட்டத்தின் மதிப்பு 2.1 பில்லியன் டாலர், வெறும் 6 வருடம் மட்டுமே இயங்க கூடிய இந்த திட்டத்தின் மதிப்பு 17400 கோடி ரூபாய் எனில் ஒரு வருடத்திற்கு சுமார் 2900 கோடி ரூபாய் இந்த ஒரு ஒப்பந்தம் மூலம் ஹெச்சிஎல் டெக் பெற உள்ளது. இதற்கு முன்பு ஹெச்சிஎல் பெற்ற மிகப்பெரிய திட்டம் 2019ல் XEROX நிறுவனத்தின் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ரினவல் திட்டம்.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹெச்சிஎல் டெக் ஷிவ் நாடார் கையில் இருந்து ரோஷினி நாடார் கைக்கு வந்த சில மாதங்கள் தடுமாறினாலும், அதை தொடர்ந்து நிலையான வளர்ச்சியும், கடந்த சில காலாண்டில் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

2 வருடம் முன்பு முதல் முறையாக சந்தை மதிப்பீட்டில் விப்ரோ நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்தது, இதன் பின் பல முறை 3வது இடத்திற்கும் 4வது இடத்திற்கு தாவி வந்த நிலையில் கடந்த 6 மாதமாக 3வது இடத்தை தக்கவைத்து அசத்தி வருகிறது.

ஜூன் காலாண்டு முடிவில் 2வது இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தை நெருக்கிவிட்டது. மேலும் ஐடி துறை மோசமான நிலையில் இருந்து மீண்டு வரும் நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை காட்டிலும் அதிக மதிப்புடைய திட்டத்தை பெற்று அசத்தியுள்ளது.

மேலும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ப்ரதீக் அகர்வால் இதுக்குறித்து கூறுகையில் நிறுவனத்தில் பெரிய மதிப்பிலான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து உறுதி செய்யும் பைப்லைனில் உள்ளதாக தெரிவித்தார்.

இன்போசிஸ்-ஐ ஓரம்கட்டும் HCL.. சைலென்டாக ரூ.17400 கோடி  ப்ராஜெக்டை கைப்பற்றியது..!

கடந்த சில வாரத்தில் இன்போசிஸ் பெயர் வெளியிடாத ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 5 வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் திட்டமும், BP நிறுவனத்திடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் திட்டமும் கைப்பற்றியது. டிசிஎஸ் நிறுவனம் NEST நிறுவனத்திடம் இருந்து 1.9 பில்லியன் டாலர் திட்டத்தை கைப்பற்றியது.

இதேவேகத்தில் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் செயல்பட்டால் அடுத்த 2-4 வருடத்திற்குள் இன்போசிஸ்-ஐ பின்னுக்குத்தள்ளி 2வது இடத்தை பிடித்துவிடும், இதேவேளையில் இன்போசில் நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறும் நிலையில் வர்த்தகத்திலும், சந்தை மதிப்பீட்டிலும் தடுமாற்றம் ஏற்படலாம்.

இன்போசிஸ் சந்தை மதிப்பு 5.71 லட்சம் கோடி ரூபாய், கடந்த ஒரு வருடத்தில் இன்போசிஸ் பங்குகள் 14.82 சதவீதம் சரிவு. இதுவே ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.16 லட்சம் கோடி ரூபாய், கடந்த ஒரு வருடத்தில் ஹெச்சிஎல் பங்குகள் 21.36 சதவீதம் உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+