இந்தியாவின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.
கடந்த 01 அக்டோபர் 2019 முதல் 31 டிசம்பர் 2019 வரையான டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கு சாதகமாகவே வந்து இருக்கின்றன.
ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த 2018 டிசம்பர் காலாண்டை விட 2019 டிசம்பர் காலாண்டில் 16.30 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
லாபம்
கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் லாபம் 2,611 கோடி ரூபாயாக இருந்தது. இந்த டிசம்பர் 2019 காலாண்டில் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் லாபம் 3 ஆயிரத்து 37 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கணிப்புகள் தவிடு பொடி
அனலிஸ்டுகள் மற்றும் சந்தைத் தரகர்கள் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் லாபம், இந்த டிசம்பர் 2019 காலாண்டுக்கு 2,757 கோடி ரூபாயாக இருக்கும் என கணித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனலிஸ்டுகள் மற்றும் பங்குச் சந்தைத் தரகர்களின் கணிப்பைத் தாண்டி, இந்த டிசம்பர் 2019 காலாண்டில் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் 3,037 கோடி ரூபாய் லாபம் காட்டி இருப்பது ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் பங்குதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
வருவாய்
ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்து இருக்கும் அதே நேரத்தில், அதன் வருவாயும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் எபிட்டா (EBITDA - Earning before Interest Tax, Depreciation and Amortization) மார்ஜின் 22.6 சதவிகிதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள்
கடந்த டிசம்பர் 2018 காலாண்டை விட இந்த டிசம்பர் 2019 காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தல் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 725 பேரும், சேல்ஸ் அண்ட் சப்போர்ட் பிரிவில் 11,448 பேரும் பணியாற்றி வருகிறார்கள். ஆக மொத்தம் டிசம்பர் 2019 நிலவரப்படி ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 173 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications