எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இன்று டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், தனது பங்குதாரர்களுக்கு நான்காவது இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 6% அதிகரித்து ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 5% அதிகரித்து ரூ.29,890 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் இக்காலாண்டில் முடிவில் தனது பங்குதாரர்களுக்கு ரூ.12 இடைக்கால ஈவுத்தொகையும் மற்றும் ரூ.6 சிறப்பு ஈவுத்தொகை என மொத்தம் ஒரு பங்கிற்கு ரூ.18 ஈவுத்தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு சுமார் 25 ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டாடுவதற்காக இந்த சிறப்பு ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஈவுத்தொகை அறிவிப்பு, தனது பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிப்பதிலும், அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி செலுத்தும் விதமாக எச்.சி.எல் டெக்னாலஜிஸின் இந்த ஈவுத்தொகை அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
எச்.சி.எல் டெக்னாலஜிஸ்-ன் CEO மற்றும் நிர்வாக இயக்குனர் சி.விஜயகுமார் இந்நிறுவனத்தின் வருவாய், லாபம் குறித்து கூறுகையில் இந்த வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் ஏஐ-இயங்கும் தீர்வுகளுக்கான வலுவான தேவை காரணம் என்று கூறினார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் நிறுவனத்தின் செயல்திறன் குறித்து நம்பிக்கை அளிக்க கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ரோஷ்னி நாடார் மேலும் பேசுகையில் ஏஐ அடிப்படையிலான சேவைகளில் ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Click it and Unblock the Notifications