இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் நிறுவனம் ஊழியர்களுக்கு சொற்ப அளவிலான ஊதிய உயர்வை தந்துவிட்டு தலைமை செயல் அதிகாரிக்கு மட்டும் அதிக விகிதத்தில் ஊதிய உயர்வு தந்திருப்பது தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது.
ஹெச்சிஎல் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு சராசரியாக 7 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு தந்துள்ளது. ஆனால் அதன் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் விஜயகுமார் 190% ஊதிய உயர்வு பெற்றிருக்கிறார்.

2023-24ஆம் நிதியாண்டில் தலைமை செயலதிகாரி விஜயகுமாருக்கு 190 சதவீதம் ஊதியத்தை உயர்த்தி தந்திருக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபமும் வருமானமும் 5% அதிகரித்துள்ளது. அதாவது நிறுவனத்தின் வருமானம் 29,890 கோடி ரூபாயாகவும் லாபம் 4591 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
இதனை அடுத்து தங்கள் நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 18 ரூபாய் என்ற விதத்தில் டிவிடென்டையும் இந்த நிறுவனம் வழங்கியிருக்கிறது. நிறுவனத்தின் வருமானமும் லாபமும் அதிகரித்திருக்கும் போது ஊழியர்களுக்கு சராசரியாக 7 சதவீதம் வரை மட்டுமே இந்த நிறுவனம் ஊதிய உயர்வு தந்திருக்கிறது.
கஷ்டப்பட்டு பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரிய அளவு ஊதிய உயர்வு வழங்காமல் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவருக்கு மட்டும் இவ்வளவு அதிக ஊதியம் வழங்குவது ஏன் என்ற கேள்வியை பலரும் சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளனர்.
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை செய்த அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய விஜயகுமார் 2024 ஆம் நிதி ஆண்டில் 190 சதவீதம் கூடுதல் ஊதியத்தை பெற்றிருக்கிறார். இந்திய ஐடி துறையில் அதிக ஊதியம் பெரும் தலைமை செயல் அதிகாரி என்ற பெருமை விஜயகுமாருக்கு உண்டு .
2023 ஆம் ஆண்டில் இவருடைய சம்பளம் 28 கோடி ரூபாய் , ஆனால் 2024ஆம் ஆண்டில் அது 84.16 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் அடிப்படை ஊதியம் 16.39 கோடி ரூபாய், அவருடைய செயல்திறனுக்காக வழங்கப்படக்கூடிய போனஸ் தொகை 9.53 கோடி அது தவிர மற்ற பலன்கள் என மொத்தமாக அவருக்கு 84 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் நபரின் ஊதிய உயர்வுக்கும் சாதாரண நிலையில் இருக்கும் ஊழியரின் ஊதிய உயர்வுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications