எச்.சி.எல் டெக்னாலஜிஸ் கொடுத்த குட்நியூஸ்.. டிசிஎஸ் மாதிரி இல்ல..!

எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையை சிறிய அளவில் அதிகரித்து புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்திய ஐடி சேவை துறையில் பல காலாண்டுகளாக ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு இருந்தது, ஆனால் இது டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ்-க்கு மாறியது. இதனால் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களும் சோகத்தில் இருந்த நிலையில், தற்போது ஹெச்சிஎல் காலாண்டு முடிவின் மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பொருத்த வரையில் கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 2,134 புதிய ஊழியர்கள் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட அட்ரிஷன் விகிதம் (Attrition Rate) சிறிதளவு அதிகரித்து, தற்போது 13.2% ஆக உள்ளது.

எச்.சி.எல் டெக்னாலஜிஸ் கொடுத்த குட்நியூஸ்.. டிசிஎஸ் மாதிரி இல்ல..!


இதுவே டிசிஎஸ் நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 607,354 ஆக இருந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 612,724 ஊழியர்களை விட 5,370 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.

எச்சிஎல் டெக்னாலஜிஸ்-ன் அட்ரிஷன் விகிதம் சிறிதளவு அதிகரித்திருந்தாலும், கடந்த காலாண்டில் தனது வணிகத் துறைகளில் வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. எச்.சி.எல் டெக்னாலஜிஸ்-ன் CEO மற்றும் நிர்வாக இயக்குனர் சி.விஜயகுமார் இந்நிறுவனத்தின் வருவாய், லாபம் குறித்து கூறுகையில் இந்த வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் ஏஐ-இயங்கும் தீர்வுகளுக்கான வலுவான தேவை காரணம் என்று கூறினார்.


மேலும் நிறுவனத்திற்கு உள் பயன்படுத்தும் சேவையில் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் அனைத்து தரப்பட்ட சேவைகளுக்கும் ஏஐ அடிப்படையிலான சேவைகளை பரிந்துரைத்து வருவது மூலம் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை இக்காலாண்டில் பெற்றள்ளது.

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 6% அதிகரித்து ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.


இதேபோல், நிறுவனத்தின் வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 5% அதிகரித்து ரூ.29,890 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் லாபத்திற்கான முக்கிய அளவுகோலான ஆபரேட்டிங் ஈபிட் (வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்) கூட நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த காலாண்டில், ஆபரேட்டிங் ஈபிட் வருடாந்திர அடிப்படையில் 4% அதிகரித்து ரூ.5,821 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த காலாண்டை ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பைக் காட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+