இந்தியாவில் நொய்டாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும், தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள ஹெச்சிஎல் நிறுவனம் அடுத்த 2021ம் நிதியாண்டில் 15,000 பேரை புதியதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப துறையில் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய ஆட்களை பணியமர்த்தப் போவதாக தெரிவித்து வருகின்றன.
இந்த அறிவிப்பானது ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான் என்றும் கூற வேண்டும். இது குறித்து இந்த நிறுவனத்தின் மனித வள அதிகாரி அப்பாராவ் விவி கூறுகையில், ஹெச்சிஎல் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் 15,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்ஷனில் ஆக்ஸிஸ் வங்கி!

பயிற்சியுடன் வேலை
இந்த நிறுவனம் புதிதாக படித்து முடித்தவர்களுக்கு ஆண்டு ஊதிய தொகுப்பு 3.5 - 3.8 லட்சம் ரூபாய் வரை மாறுபடும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெச் சி எல் நிறுவனம் 12ம் வகுப்பு பிறகு தகுந்த பயிற்சி அளித்து அதன் பின்னர் பணிக்கு அமர்த்தி வருகிறது. இதற்காக இந்த நிறுவனம் HCL TSS என்ற அமைப்பு மூலம் மாணவர்களுக்கு பயிற்சி (ஹெச்.சி.எல் பயிற்சி மற்றும் பணியாளர் சேவைகள்) அளித்தும் வருகிறது.

போதுமான திறன்கள் இல்லை
இந்த பணியமர்த்தலானது ஒரு தகுதியான திறமை மற்றும் காலியான வேலைகளுக்கு இடையில் மிகவும் இடைவெளியைக் குறைக்கிறது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த இடைவெளியானது போதுமான திறன்கள் இல்லாததால் நிரப்ப கடினமாக உள்ளது என்றும் ஹெச்சிஎல் அறிவித்துள்ளது. இதனால் வேலைக்கு அமர்த்தும் விகிதம் குறைந்து வருகிறது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலவை ஊழியர்கள்
இதே அமெரிக்காவில் உள்ள மொத்த பணியாளர்களில் உள்ளூர் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் உள்ளனர். நாங்கள் அந்த வரம்பிலேயே செயல்படவும் விரும்புகிறோம். ஏனெனில் இது அமெரிக்காவில் தொழிலாளர் கலவையைப் பொறுத்த வரையில், எங்களுக்கு நல்ல நெகிழ்வு தன்மையை வழங்குகிறது என்றும் அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்
கடந்த சில தினங்களுக்கு முன்பு மற்றொரு ஐடி துறையின் ஜாம்பவான் ஆன டிசிஎஸ் நிறுவனம் அடுத்து வரும் 2021ம் நிதியாண்டில் சுமார் 39,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தப் போவதாக தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியதை விட, இது 30% அதிகம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் அடுத்த ஆண்டு ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.