இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் பிற ஐடி சேவை நிறுவனங்களைப் போலவே ஹெச்1பி விசா கீழ் அமெரிக்காவில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
ஹெச்1பி விசா கீழ் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அளிக்கப்படும் அதே சம்பளத்தைத் தான் அளிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது.
இதை முறையாகப் பின்பற்றாமல் ஹெச்சிஎல் நிறுவனம் ஹெச்1பி விசா கீழ் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்குக் குறைவான சம்பளத்தைக் கொடுத்து ஏமாற்றியுள்ளது என எக்னாமிக் பாலிசி இன்ஸ்டியூட் (EPI) அமைப்பு நிறுவன தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா
ஹெச்1பி விசா மூலம் திறன் வாய்ந்த ஊழியர்களைப் பணியில் அமர்த்தி விட்டு அமெரிக்கர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்திற்கு இணையாகக் கொடுக்காமல் குறைவான சம்பளத்தை ஹெச்சிஎல் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அளித்து வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்து வழக்கும் தொடுக்கப்பட்டது.
எக்னாமிக் பாலிசி இன்ஸ்டியூட்
இந்த வழக்கின் ஒரு பகுதியாகத் தற்போது எக்னாமிக் பாலிசி இன்ஸ்டியூட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் முக்கியமானது என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அதிகப்படியான ஹெச்1பி விசாக்களை பெறும் டாப் ஐடி நிறுவனங்களில் ஹெச்சிஎல் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
95 மில்லியன் டாலர்
ஹெச்சிஎல் நிறுவனத்தின் கீழ் பல ஆயிரம் டெக் ஊழியர்கள் சப்கான்டிராக்ட் மூலம் டிஸ்னி, பெட்எக்ஸ், கூகுள் எனப் பல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுப்பதன் மூலம் சுமார் 95 மில்லியன் டாலர் அளவிலான தொகை ஹெச்சிஎல் சேமித்துள்ளது என ரான் ஹிரா, டேனியல் கோஸ்டா ஆகியோர் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
55,000 டாலர் சம்பளம்
ஹெச்சிஎல் நிறுவனத்தின் செயலால் பாதிக்கப்பட்டது ஹெச்1பி விசா ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்கர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உதாரணமாக ஆரக்கிள் தொழில்நுட்ப வல்லுனர்களை ஹெச்சிஎல் வெறும் 55,000 டாலர் சம்பளத்தில் நியமித்துள்ளது. இது அமெரிக்கர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விடவும் மிகவும் குறைவு.
ஹெச்1பி விசா ஊழியர்கள்
ஹெச்1பி விசா-வில் வரும் ஊழியர்களுக்கு அமெரிக்கர்களுக்குக் கொடுக்கப்படும் இணையாகச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தான் ஹெச்1பி விசா-வின் முக்கிய அம்சம். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பைப் பிற நாட்டவர்கள் பறிக்க முடியாது என்பது தான்.
ஹெச்சிஎல் செய்தி தொடர்பாளர்
இந்நிலையில் ஹெச்சிஎல் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் ஹெச்சிஎல் ஊழியர்களுக்கு அனைத்து விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்து சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது என ஒரு பத்திரிக்கைக்குப் பதில் அளித்துள்ளார்.
31,000 ஹெச்1பி விசா
2009ல் இருந்து ஹெச்சிஎல் இதுவரை சுமார் 31,000 ஹெச்1பி விசா-வை பெற்றுள்ளது, கடந்த வருடம் மட்டும் 1405 புதிய விசா மற்றும் 2,801 விசா ரினிவல் செய்து, அதிக ஹெச்1பி விசா பெற்றுள்ள நிறுவனங்களில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications